தஞ்சாவூர் அபூர்வம்.. தாயுடன் மீனவர் நெருக்கம்! கடைசிவரை நம்ப மறுத்த மகன்கள்.. கருவேலங்காட்டில் பகீர்
தஞ்சாவூர்: தஞ்சையில் கருவேலங்காட்டில் ரத்த வெள்ளத்துடன் விழுந்து கிடந்த இளைஞர் யார் என்பது குறித்த விசாரணையில், பல்வேறு திடுக் தகவல்களை போலீசார் வெளிப்படுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காடு ஒன்று உள்ளது.. இங்கு இளைஞர் ஒருவர் உடம்பெல்லாம் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள், இளைஞரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இளைஞர் இறந்துவிட்டார்.. இதையடுத்து, சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.
ராஜா அம்மா: அப்போதுதான், உயிரிழந்தவர் 36 வயதுடைய ராஜா என்பதும், மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த மீனவர் என்பதும் தெரியவந்தது. இதனிடையே, தன்னுடைய மகன் கொலையில், சரபேந்திரராஜன்பட்டினத்தை சேர்ந்த விக்னேஷ் (எ)விக்கி(22), அவரது தம்பியான 17 வயது சிறுவன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார் (51) ஆகிய 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக ராஜாவின் அம்மா நாகேஷ்வரி போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின்பேரில், சரபேந்திரராஜன் பட்டினத்தை சேர்ந்த விக்னேஷ் (எ) விக்கி(22), அவரது தம்பி 17 வயது சிறுவன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார் (51) ஆகிய 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். இறுதியில் இளைஞர் மரணம் குறித்த மொத்த உண்மையும் அம்பலமானது.
இறால் பண்ணை: இதுபற்றி போலீஸ் தரப்பில் சொன்னதாவது: "மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்தவர் செல்வம்.. இவரது மனைவி அபூர்வம்.. இவருக்கு 45 வயதாகிறது. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால், கருத்துவேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வந்துவிட்டார் அபூர்வம்..
மூத்த மகன் விக்கி என்பவருக்கு திருமணமாகி, தனியாக வசித்து வருகிறார்.. 2வது மகனுக்கு 17 வயதாகிறது. அதே பகுதியில் உள்ள இறால் பண்ணையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 51 வயதுடைய குமார் என்பவருடனும், 36 வயதுடைய ராஜா என்பவருடனும் அபூர்வத்துக்கு தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.. இந்த 2 பேரில், குமாருடன் உள்ள தொடர்பை மட்டும், அபூர்வம் மெல்ல மெல்ல குறைத்துக்கொண்டதாகவும் தெரிகிறது.
நம்ப மறுப்பு: இதனால் ஆத்திரமடைந்த குமார், அபூர்வத்தின் மகன்கள் 2 பேரிடமும், "உன் அம்மாவுக்கும், ராஜாவுக்கும் தகாத உறவு" என்று சொல்லிவிட்டார்.. ஆனால், 2 மகன்களுமே இதனை நம்ப மறுத்துள்ளனர்.
இதனால் சமயம் பார்த்து அபூர்வத்தை சிக்க வைக்க வேண்டும் என்று காத்திருந்தார் குமார்.. நேற்று அதிகாலை அபூர்வத்தின் வீட்டில் ராஜா இருப்பதை பார்த்த குமார், உடனடியாக, அபூர்வத்தின் 2 மகன்களிடம் விஷயத்தை சொல்லி உள்ளார். அத்துடன், அவர்கள் 2 பேரையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்..
இரும்பு கம்பி: அப்போதுதான், தாயை பார்த்து ஆத்திரமடைந்த 2 மகன்களும், அங்கிருந்த இரும்பி கம்பியை எடுத்து, ராஜாவை சரமாரியாக தாக்கினார்கள்.. பிறகு, உயிருக்கு போராடிய ராஜாவை, ரத்த காயங்களுடன் பைக்கில் ஏற்றிச்சென்று கருவேலங்காட்டில் வீசிவிட்டார்கள்..
இவ்வளவும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அண்ணன் - தம்பி உட்பட 3 பேரையுமே போலீசார் கைது செய்துள்ளனர். குமார், விக்கி ஆகிய 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். விக்கியின் தம்பியை, திருச்சியிலுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications