தஞ்சாவூரின் அழகை பாருங்க.. இம்புட்டு அழகான ஊரில் இருந்தால்... எப்படி ஊரைவிட்டு போக மனசு வரும்
தஞ்சாவூர்: காவிரி டெல்டாவில் வாழ்ந்தவர்களுக்கும், டெல்டாவை பக்கத்தில் இருந்து பார்த்தவர்களுக்கும் தான் தெரியும். அது எவ்வளவு அழகான பூமி என்று.. கண்ணுக்கு எட்டிய தூரம் நெல் வயல்களும், பச்சை பசேல் என்ற பசுமையும், பொங்கி வரும் காவிரியும் தஞ்சாவூரின் அடையாளம் ஆகும். அந்த ஊரில் காவிரி நீர் தற்போது பாய்ந்தோடுகிறது. அந்த அழகான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மற்ற மாவட்டத்தினர் எத்தனை பேர் வேலைக்காக வெளிநாடு செல்கிறார்கள் என்பது குறித்து தெரியாது. ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக தெரியும்.. தஞ்சாவூர் , புதுக்கோட்டை, திருச்சி, காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களும், பக்கத்தில் உள்ள சிவகங்கையும் வெளிநாடுகளில் வேலை செய்வோரை அதிகம் கொண்ட மாவட்டங்கள் ஆகும்.

விவசாயத்திற்கு அடுத்தபடியாக அந்த ஊர்மக்களின் வாழ்வாதாரம் என்றால், வெளிநாட்டில் வேலை தான்.. சிங்கப்பூர், மலேசிய மற்றும் அரபு நாடுகள் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் வேலைக்கு போன தமிழர்களின் பட்டியலை எடுத்த தஞ்சை டெல்டா முக்கியமான இடத்தில் இருக்கும்.

பொங்கி வரும் காவிரி ஆறும், மொத்த தமிழ்நாட்டுக்கு சோறு பொங்கிபோடும் வயல்களையும் வைத்துள்ள டெல்டா மக்கள், விவசாயத்தில் சரியான வருமான கிடைக்காத காரணத்தால், வெளிநாட்டில் வேலைக்கு செல்கிறார்கள். எத்தனை பேர் தங்கள் ஊரின் அழகை நினைத்து ஏங்கியபடி இருப்பார்கள் தெரியுமா?அதுபற்ற பல பதிவுகள் பார்த்திருப்போம். ஒவ்வொருவருக்குமே அவரவர் சொந்த ஊர் சொர்க்கபூமி தான் என்றாலும், தஞ்சை நெல்டா, காவிரித்தாயின் வயிற்றுப்பகுதியாகும்..

காவிரி தான் பிள்ளைகளை போல் பெற்றெடுத்து அனுப்பும் நெல்களைத்தான் நாம் சாப்பிடுகிறோம். அங்கு விளையும் நெல் மட்டுமல்ல, அந்த இடமே அவ்வளவு அழகாக இருக்கும். பல வலிகளை கடந்துதான் டெல்டா விவசாயிகள் நெல்களை விளைவிக்கிறார்கள். அங்கு அவ்வளவும் நஞ்சை நிலமாகும். தென்னை மரங்களும், நெல் வயல்களும், கண்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும். தஞ்சாவூரை பொறுத்தவரை நகரில் காவிரி பொங்கி வந்தால், அதை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அந்த காட்சிகள் தான் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், தஞ்சாவூரில் இவ்வளவு அழகை வைத்துக் கொண்டு எப்படி சார் ஊரை விட்டு போறாங்க என்று கேட்கிறார்கள்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications