Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க.. கதறி அழுத மூதாட்டி

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார்.

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். துறைகளில் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு நிவாரணம் பெற முடியும்.

அதன்படியே ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாம் நடக்கும். அதில் அளிக்கப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வினையும் மாவட்ட ஆட்சியர்கள் வழங்குவார்கள்.

கதறிய மூதாட்டி

கதறிய மூதாட்டி

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தோளில் ஒரு பையுடன் மூதாட்டி ஒருவர் வந்தார். அவர் அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது, "என் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க".. நான் ஒருத்தியா வந்திருக்கேன்.. என்னை கவனிக்க ஆள் இல்லை. என் மருமகள் என்னை அடிக்கிறாள். என்னை அடித்ததில் என் மண்டையில் காயம் ஏற்பட்டது (காயத்தை காட்டினார்).

 கோர்ட்டுக்கு போனேன்

கோர்ட்டுக்கு போனேன்

நான் கோர்ட்டுக்கு போனேன். அவங்க எனக்கு 3 வேளை சோறுபோடச் சொன்னாங்க.. 2 ஆயிரம் ரூபாய் பணம் தரச்சொன்னாங்க.. பெண்ணை எல்லாம் கட்டிக்கொடுத்தாச்சு.. அவங்க வரக்கூடான்னுட்டாங்க. என் பைனும் கல்யாணம் ஆன பின்னாடி கவனிக்கல.. என்னை கவனிக்கவே இல்லை. சொத்தை எல்லாம் வித்துட்டாங்க.. எனக்கு கொடுக்குற காசு பத்தல.. கவனிக்க ஆள் இல்லாம கஷ்டப்படுறேன்.. என்னை கவனிக்க ஆள் இல்லை" என்று மீண்டும் மீண்டும் கதறி அழுது கூறியபடி இருந்தார். அவர் பெயர் என்ன, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதை அவர் கூறவில்லை. இது தொடர்பாக சமூக ஊடங்களில் வீடியோ பகிரப்பட்டுள்ளது.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல

இந்த வீடியோவை பார்த்த மக்கள் பலரும், இந்த நிலைமை தான் நாளை அவர்களுக்கும் நடக்கும் என்று கூறி வருகிறார்கள். சிலர், சொத்தை எல்லாம் பாட்டியின் பெயரில் மாற்றி கோடுக்க வேண்டும்
என்றும், அரசு அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இதை பார்த்தாவது கையில் பணம் கடைசிவரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார். தற்போதைய தலைமுறைக்கு பணம் மட்டுமே தன் வாழ்வாதாரத்தை மற்றும் என்பது தவறு என இன்னொரு நெட்டிசன் கூறினார். அவர்கள் குழந்தைகளால் விரைவில் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

இறுதி காலம் எப்படி

இறுதி காலம் எப்படி

சமூக ஆர்வலர்கள் கூறும் போது, இளைஞர்களாக இருக்கும் காலத்தில் கஷ்டப்பட்டு உழைத்து சொத்தை சேர்க்கும் பெற்றோர், கடைசி காலத்தில் சொத்துக்களை எல்லாம் பிள்ளைகள் பெயரில் எழுதி வைப்பது தவறு. அவர்கள் இல்லாத காலத்திற்கு பின்பே சொத்துக்களையோ பணத்தையோ பிரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அப்போது தான் உயிருடன் இருக்கும் வரை மரியாதை கிடைக்கும். அதேபோல் இளம் வயதில் பெற்றோர்கள் நன்றாக சம்பாதித்து செலவழித்துவிடாமல் கடைசி காலத்திற்கு வேண்டும் என்று கொஞ்சமாவது மாதா மாதம் சேமித்து வைக்க வேண்டும். அந்த சேமிப்பை அவர்கள் யாருக்கும் தராமல் அவர்கள் தங்கள் கைப்பட கடைசி காலம் வரை வைத்திருந்து வாழ்வது நல்லது. அப்படி செய்தால் இறுதி காலம் மரியாதையாகவும், மதிப்புடனும் இருக்கும். பிள்ளைகளிடம் ஒரு வேளை சோற்றுக்கு கையேந்தி நிற்கும் நிலை வந்தால், அது இறுதிகாலதத்தை கடினமாக்கிவிடும் என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+