என் பாப்பாவைவிட எனக்கு விஜய்தான் பிடிக்கும்.. கைக்குழந்தையுடன் தஞ்சை வந்த பெண் சிலாகிப்பு!
தஞ்சாவூர்: தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், தன் குழந்தையைவிட விஜய்யைத்தான் பிடிக்கும் என்று கூறி அதிரவைத்தார். குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து செல்லக்கூடாது என்று தவெக நிர்வாகிகள் அறிவுறுத்தலை மதிக்காமல் பலரும் தொடர்ச்சியாக குழந்தையை அழைத்து வருவதும் விஜய்யின் வாகனத்தை பின் தொடரும் நிகழ்வுகளும் அரங்கேறுவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தவெக தலைவர் விஜய் தஞ்சையில் நேற்று நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினர். 4, 900 பேருக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் எனவும் கியூஆர் கோடு உள்ள நிர்வாகிகள் கலந்து கொள்ளலாம் என்று ஏகப்பட்ட கெடுபிடிகளை தவெகவினர் விதித்தனர்.

கட்டுப்பாடுகளை மதிக்காத தவெகவினர்
சேலம் கூட்டத்தில் வட மாநில நபர் ஒருவர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததால், அதற்கு அடுத்தடுத்த நிர்வாகிகள் கூட்டத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. என்னதான், கட்டுப்பாடுகள் விதித்தாலும் தவெகவினர் அதை காற்றில் பறக்க விட்டு விஜய்யை பின் தொடர்வது, கூட்டத்தில் முண்டியடித்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கைக்குழந்தையுடன் வந்த பெண்
விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் சாலையில் விஜய்யின் வாகனத்தை விரட்டி சென்ற 19 வயதான இளைஞர் விக்னேஷ் என்பவர் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு கைக் குழந்தைகளுடன் விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு வரக்கூடாது என்று போலீசாரும் தவெக நிர்வாகிகளும் அறிவுறுத்தினாலும், சில பெண்கள் இதை மதிக்காமல் விபரீதம் புரியாமல் வருகை தருவதையே பார்க்க முடிகிறது.
என் பாப்பாவை விட விஜய்யை பிடிக்கும்
அந்த வகையில் நேற்று விஜய்யை பார்க்க வந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்தார். அது மட்டும் இன்றி தன் பாப்பாவை விட எனக்கு விஜய்யை தான் பிடிக்கும் என்று கூறியது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண் கூறியதாவது:-
விஜய்யை பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கு.. காலையில் விஜய்யை பார்ப்பதற்காக நானும் என் பொண்ணும் கிளம்பி வந்து இருக்கோம். இதற்கு முன் விஜய்யை பார்த்தது இல்லை. முதல் முறையாக பார்க்க இருக்கிறோம். விஜய்யை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
எல்லாரும் பாத்துப்பாங்க
சின்ன வயசில் இருந்தே ரொம்ப பிடிக்கும். என் பொண்ணை விட விஜய்யை தான் ரொம்ப பிடிக்கும். எல்லாருமே அண்ணனுக்காகத்தான் நிற்கிறோம். குழந்தைக்கு அனுமதி இல்லை என்பது எனக்கு தெரியாது. விஜய்யை பார்த்தே ஆகணும்.. அதற்கு தான் வந்து இருக்கிறோம்.
பாதுகாப்பு நல்லாகத்தான் இருக்கிறது. என் அண்ணனுக்காகத்தான் பாப்பாவை தூக்கிட்டு வந்து இருக்கிறேன்.. எல்லாரும் பார்த்துப்பாங்க.. அந்த நம்பிக்கையில்தான் வந்து இருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications