அண்ணாமலைக்கு ஒன்னுமே தெரியாது! திடீரென திமுக எம்எல்ஏவுக்கு ஆதரவு ‘வாய்ஸ்’ கொடுத்த டிடிவி! என்னவாம்?
தஞ்சை : புதுக்கோட்டையில் நடக்கும் மொய் விருந்தை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவதாகவும், கர்நாடகாவில் இருந்த அவருக்கு மொய் விருந்து பற்றி எதுவும் தெரியாது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பேராவூரணி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரான அசோக்குமார் தனது பேரப் பிள்ளைகளுக்கு காது குத்து விழா வைத்து மொய் விருந்தளித்தார்.
இந்த மொய் விருந்து மூலம் சுமார் 11 கோடி ரூபாய் வசூல் ஆனதாகவும், பிரம்மாண்டமான மொய் விருந்து குறித்து தான் அப்பகுதியில் பேசுபொருளாக இருந்தது. சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் எழுந்தது.

மொய் விருந்து
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. நடத்திய மொய்விருந்தில் 11 கோடி ரூபாய் வசூல் ஆனது குறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், காதுகுத்தபட்டதா திமுக எம்எல்ஏ பேரப்பிள்ளைகளுக்கும், வருமானவரித்துறையினருக்கும் என்ற தலைப்பில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

பாஜக அண்ணாமலை
மேலும், மொய் விருந்து என்பது கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் முயற்சி என்றும் விமர்சித்திருந்தார். இதனையடுத்து மொய் விருந்து பேராவூரணி பகுதி மக்களின் பழக்க வழக்கங்களில் ஒன்று என்றும், பண்பாடு தெரியாமல் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என திமுகவினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் கடுமையாக அவரை விமர்சித்தனர்.

டிடிவி தினகரன்
இந்நிலையில் புதுக்கோட்டையில் நடக்கும் மொய் விருந்தை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,"பேராவூரணி, புதுக்கோட்டை பகுதிகளில் ரொம்ப நாளாக இருக்கும் மொய்விருந்து நிகழ்ச்சியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துகிறார்.

ஒன்றுமே தெரியாது
அவர் சொல்வது தவறு, வட்டியில்லாத கடன் தருவது, ஒருவரை கைத் தூக்கிவிடுவது கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அவருக்கு எதுவும் தெரியாது" என கூறியுள்ளார். இந்நிலையில் என்னதான் எதிர்கட்சியாக இருந்தாலும், தங்கள் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு பாரம்பரியம் சார்ந்த பிரச்சினை என்றவுடன் உடனே வாய்ஸ் கொடுத்த டிடிவியை திமுகவினரே பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications