திடீர் வயிற்றுப் பிரச்சனை.. தஞ்சாவூர் சென்ற டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி!
தஞ்சாவூர்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ளார். இவர் அதிமுகவிற்கு மீண்டும் என்ட்ரி கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் மீண்டும் சசிகலா - டிடிவி தினகரன் இணைய வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். இதை டிடிவி தினகரனும் ஏற்றுக்கொள்வது போல கருத்து தெரிவித்து உள்ளார்.
ஆனால் அமமுக தனிக்கட்சியாக உருவெடுத்துவிட்டது. இதனால் அதிமுகவில் மீண்டும் டிடிவி தினகரன் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தஞ்சாவூர்
இந்த நிலையில்தான் அமமுக நிர்வாகிகளை சந்திக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் டிடிவி தினகரன் தஞ்சாவூர் சென்றார். நேற்று இரவு அவர் சாப்பிட்ட உணவு காரணமாக அவருக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு "புட் பாய்சன்" ஏற்பட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை
பெரும்பாலும் சிகிச்சை முடிந்து பிற்பகலில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. அவருக்கு வயிற்றுப்பிரச்சனை மட்டுமே. வேறு உடல் குறைபாடு இல்லை. அவர் உடல்நிலை நன்றாகவே இருக்கிறது. வயிற்றுப்பிரச்சனை சரியானது இன்று பிற்பகல் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை காண அமமுக நிர்வாகிகள் பலர் குவிந்துள்ளனர்.

ஓபிஎஸ்
முன்னதாக டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவிற்குள் வர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். ஓ பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர்கள். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்காக பணிகளை செய்தவர்கள் யாராக இருந்தாலும் மீண்டும் அதிமுகவிற்குள் வர வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இதற்காக யாரையும் சந்தித்து பேச நான் தயார் என்று கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்
ஓ பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சை டிடிவி தினகரன் வரவேற்றுள்ளார். தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே, என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications