TVK Vijay: கருணாநிதியாலே முடியவில்லை.. திமுக தொடர்ந்து 2வது முறை ஆட்சி பிடித்த சரித்திரம் இல்லை.. விஜய் பேச்சு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தஞ்சாவூரில் பேசிய விஜய், திமுக இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்ததாக சரித்திரம் இல்லை. கருணாநிதியால் கூட அது முடியவில்லை என பேசியுள்ளார்.

தஞ்சை செங்கிப்பட்டி பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், நானும் டெல்டாகாரன் என உங்கள் காதில் டெல்டா ஊற்ற மாட்டேன். எனக்கு விவசாயம் பற்றி விபரமாக தெரியாது. ஆனால் விவசாயிகளின் பிரச்சனைகள் தெரியும். அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்.

tvk-vijay-dmk-cant-rule-for-second-time-its-history-said-vijay

நம்மை சுற்றி சதிகள்

விவசாயிகளை குண்டர் சட்டத்தில் விவசாயிகளை கைது செய்தது திமுக. திமுக இரட்டை வேடம் போடுகிறது. ஏன் ஆட்சி முடியும்போது திமுக பெரிய திட்டங்களை ஆரம்பிக்கிறார்கள். நசநச வென்று பேசுவதை மக்கள் அதிருப்தியில் உள்ளனர். நம் மீனவர்கள் மீது அவர்கள் கையே வைக்க விட கூடாது. அதுதான் நம் ஒரே அஜன்டா.

திமுக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே இல்லை. சீன பெருஞ்சுவரை தாண்டுவதை விட அது நீளமான டாஸ்க். அது அவரின் தந்தையாலேயே முடியவில்லை. எனவே அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. நம்மை சுற்றி ஏராளமான சதிகள் உள்ளன. கரூரில் தொடங்கி ஜனநாயகன் படம் பிரச்சனை வரை பழி போடுகிறார்கள்.

சரித்திரம் இல்லை

ஜனநாயகன் படம் விவகாரத்தில் முதல்வரும் பட்டும் படாமல் பூசி மொழுகினார். அவர் உள்பட அனைவருக்கும் நன்றி. ஏற்கனவே திமுக நிர்வாகிகளால் சிஎம் சார் தூங்குவதில்லை. இப்போது நம்மால் அவரின் தூக்கம் கெட்டுவிட்டது. மக்களை வைத்து கேள்வி கேட்டு கொண்டே இருக்கிறேன். இந்த விஜய்யை நீங்கள் முடக்கலாம். ஒவ்வொரு வீட்டில் உள்ள விஜய்யை முடக்க முடியாது.

உங்களால் இல்லை.. எந்த... யாராலும் அது முடியாது. உங்கள் அப்பாவுக்கு வெங்கலம் சிலை வைக்க முயற்சித்தபோது, மக்களின் பணத்தில் யாருக்கு செலவு செய்கிறீர்கள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மக்கள் சோறுக்கு வழியில்லை, சிலை வைக்க எங்கு பணம் வந்தது. ஊரான் விட்டு நெய்யில் உங்கள் வீட்டிற்கு ஸ்வீட் செய்யாதீர்கள்.

மோசடி ஆட்சி

திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது. நீட் தேர்வை மாநில அரசால் ஒழிக்க முடியாது என தெரிந்தும், நீட்டை ஒழிப்போம் என கூறினார்கள். மோசடி ஆட்சியில் முக்கியமான ஆட்சி திமுகவுடையது. மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா, மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+