என்னா பேச்சு இது.. தஞ்சாவூர்க்காரங்க 2, 3 பொண்டாட்டிக்காரங்களா.. வனிதா மீது குவியும் புகார்கள்!

வனிதா மீது காங்கிரஸ், பாஜகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: "தஞ்சாவூர்காரங்க எல்லாருக்கும் 2 பொண்டாட்டிங்கன்னு வனிதா சொல்றாங்க.. எந்த வீட்டுக்கு போனாலும், எல்லா வீட்டுலயும் 2 பொண்டாட்டிங்க இருப்பாங்களாம்.. இவங்களை மாதிரி எந்த தஞ்சாவூர் பொண்ணும் 3 புருஷன்களோட வாழல" என்று தஞ்சை மாவட்ட மக்களை தவறாக பேசியது குறித்து நடிகை வனிதா மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.

Recommended Video

    Vanitha எப்படி 'Tanjore-ல் எல்லாருக்கும் 2 மனைவிகள்' என்று சொல்லலாம்? -குவியும் புகார்கள்

    இருக்கிற பிரச்சனையில், வனிதா விவகாரம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.. தினமும் இவர் குறித்த சர்ச்சை பேட்டிகள், பதிவுகள், வீடியோக்கள், கருத்துக்கள், கண்டனங்கள் என இப்படி ஏதாவது ஒன்று வந்து கொண்டே இருக்கிறது.

    சமீபத்தில் வனிதா வெளியிட்ட வீடியோவில், "எங்க ஊர் தஞ்சாவூரில் 2 கல்யாணங்கள் செய்யறது ரொம்ப சாதாரணம்.. ஏன் என் அப்பா விஜயகுமார் கூட 2 கல்யாணம் செய்தவர்தான்.. தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்த வீட்டில் பார்த்தாலும் அங்க 2 கல்யாணம்தான் தான் பண்ணியிருப்பாங்க' என்று கூறியிருந்தார்.

     வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதையடுத்து, சர்ச்சையும் ஆரம்பமானது.. இதனால் கொந்தளித்த காங்கிரஸ் கட்சி, பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தது.. அதேபோல, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆபீசும், எஸ்பி ஆபீசிலும் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

     2, 3 பொண்டாட்டிங்க

    2, 3 பொண்டாட்டிங்க

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் சொல்லும்போது, "தஞ்சாவூர்காரங்க எல்லாருக்கும் 2 பொண்டாட்டிங்கன்னு வனிதா சொல்றாங்க.. எந்த வீட்டுக்கு போனாலும், எல்லா வீட்டுலயும் 2 பொண்டாட்டிங்க இருப்பாங்களாம்.. இவங்களை மாதிரி எந்த தஞ்சாவூர் பொண்ணும் 3 புருஷன்களோட வாழல.. ஆனால் தெருவுக்கு ஒருத்தருகூட அப்படி இருக்க வாய்ப்பில்லை.

     தஞ்சை பெண்கள்

    தஞ்சை பெண்கள்

    அத்திபூத்தாற்போல, லட்சத்துல ஒருத்தர் அப்படி பண்ணியிருக்கலாம்.. அது சட்டத்துக்கும், அல்லது 2 மனைவிகளுக்கும் விருப்பப்பட்டு நடந்திருக்கலாம்.. ஆனால், இவங்க போல, எந்த தஞ்சை மாவட்டத்துல இருக்கிற பெண்ணும் 3 புருஷன்களோ, வாழல.. அதனால ஒட்டுமொத்த தஞ்சை மாவட்ட பெண்கள், ஆண்கள் மீது தவறாக பேசிய வனிதா விஜயகுமார் மீது புகார் தந்துள்ளோம்.

     வலுக்கும் எதிர்ப்பு

    வலுக்கும் எதிர்ப்பு

    இதுக்கு நடவடிக்கை எடுக்கறதா சொல்லியிருக்காங்க.. இனி இப்படி வீடியோ போட கூடாது.. பதிவிட்ட வீடியோவுக்கும் அவங்க மன்னிப்பு கேட்கணும்.. சொன்ன கருத்தை உடனடியாக வாபஸ் வாங்கணும்.. இல்லைன்னா, அவரை கண்டித்து மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று ஆவேசத்துடன் கூறினர்.. தொடர்ந்து வனிதாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+