விஜய் மீட்டிங்கில் சிரித்த சங்கீதா.. சோஷியல் மீடியாவில் தெறிக்கும் போட்டோ! நீங்க அதை பாத்தீங்களா?
தஞ்சாவூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சார நிகழ்ச்சியில் பேசியபோது அவரது ரசிகர்கள் விஜய் மற்றும் சங்கீதாவின் புகைப்படத்தை உயர்த்திப் பிடித்தனர். விஜயிடமிருந்து சங்கீதா விவாகரத்து கோரி இருக்கும் நிலையில் தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தற்போது தமிழக முழுவதும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு இந்த பிரச்சாரத்தில் தொய்வு ஏற்பட்டு இருந்த நிலையில் மீண்டும் அதனை வேகப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் வேலூரைத் தொடர்ந்து தஞ்சாவூரில் இன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பச்சை துண்டு அணிந்து வழக்கம் போலவே ஆவேசத்துடனும் சில இடங்களில் காமெடியாகவும் விஜய் பேசினார் விஜய். பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் விஜயின் மனைவி சங்கீதாவுடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்துக்காட்டினர். தொடர்ந்து அந்த புகைப்படம் மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த புகைப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதமும் எழுந்துள்ளது.
நடிகர் விஜய்யை பிரிவதாக சங்கீதா சென்னை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். இதை அடுத்து விஜய் ரசிகர்கள் சிலர் சங்கீதாவை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்தும் மறப்பியதாகவும் புகார் எழுந்தது இந்த நிலையில் விவாகரத்து கேட்டாலும் உண்மையான விஜய் ரசிகர்கள் சங்கீதாவை கொண்டாடுகிறார்கள் என கூறுகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
அதே நேரத்தில் சங்கீதாவை பொதுவெளியில் விமர்சிப்பதை மறைக்கும் வகையில் தற்போது அவரது புகைப்படத்தை பொதுவெளியில் காட்டியுள்ளனர் என்றும் விமர்சிக்கின்றனர் சிலர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு











Click it and Unblock the Notifications