கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடத்தில் இன்று காலை முதல் நீர் திறப்பு!
தஞ்சாவூர்: கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடத்தில் இன்று காலை முதல் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,105 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 9,017 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 2,513 கன அடி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 6,548 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறந்துவிடப்படும். ஆனால் இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட மறுத்தது. இதனால் மேட்டூர் அணையும் வறண்டே காணப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் முழுவதும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இடைவிடாமல் கொட்டியது. இதனால் காவிரி ஆறு, அதன் துணை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பெருவெள்ளத்தால் கர்நாடகா அணைகள் நிரம்பி வழிய, உபரி நீர் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.
இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென அதிகரித்தது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த 28-ந் தேதி திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து சீறிப் பாய்ந்த காவிரி ஆறு, முக்கொம்பை வந்தடைந்து காவிரி, கொள்ளிடமாக பிரிந்து பின்னர் கல்லணைக்கு சென்றது. கல்லணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவிரி டெல்டா பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை முதல் கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,105 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 9,017 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 2,513 கன அடி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 6,548 கன அடி நீர் காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. கல்லணை வாய்க்கால் என்பது பட்டுக்கோட்டை, பேராவூரணிக்கு காவிரி நீரை கொண்டு சேர்க்கும். வெண்ணாறு ஆற்றில் திறக்கப்படும் நீர் தஞ்சாவூர் பகுதிகளை சென்றடையும். காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீர் கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக பூம்புகார் சென்றடையும். இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications