தஞ்சையில் இளைஞரை சிறப்பு எஸ்ஐ முதலில் தாக்கினாரா? விசிக மறியலில் நடந்தது என்ன? போலீஸ் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சாவூரில் விசிகவினர் மறியல் போராட்டத்தின் போது அங்கு வந்த இளைஞர் மீது எஸ்எஸ்ஐ தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. பதிலுக்கு இளைஞரும் அவரை தாக்கியதால் பரபரப்பு எழுந்தது. இந்த சம்பவம் குறித்து தஞ்சை போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் போலீஸ் வெளியிட்ட விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை 12 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அப்போது, ஆகாஷ் (26) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தபோது, தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.

Tanjore vck

இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் மேலும் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரஹீம் தலையிட்டு, ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை எஸ்.எஸ்.ஐ. ரஹீம் பயன்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் உடனடியாக ரஹீமை கன்னத்தில் அறைந்துள்ளார். உடனடியாக போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் அந்த நபரின் செயல் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை உருவாக்காமல் தடுக்கும் நோக்கத்திலேயே குறைந்தபட்ச பலபிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வருகிறது.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் இடத்தில் தனது மேற்பார்வையாளரிடம் தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக அவருடைய மேற்பார்வையாளர் மூலம் புகார் அளிக்கப்பட்டு பின்னர் இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. போலீசார் ஆகாஷை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது.

அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் முற்றி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் முதன்மையான நோக்கமாக இருந்தது. சம்பவத்தின் போது போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நடந்தது என்ன

தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் மாநாடு தொடர்பான விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. அனுமதியின்றி அந்த பேனர் வைக்கப்பட்டிருந்ததாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதை அகற்றினர்.

இதை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அகற்றிய பேனரை அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும் என கூறி மாநகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேற்கு போலீஸார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பேனரை மீண்டும் வைத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள் வழிவிடுமாறு கூறி விசிகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது போல் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவரும் வழிவிடுமாறு கூறியதால் விசிகவினர் அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த இளைஞரை சமாதானப்படுத்த முயன்றார்.

அப்போது அந்த இளைஞர், "நான் வேலைக்குச் செல்ல வேண்டும். அப்படி செல்லாவிட்டால் எனக்கு சம்பளத்தை யார் தருவார்கள்" என கேட்டு வாக்குவாதம் செய்தாராம். அப்போது போலீஸார் அந்த இளைஞரிடம் அமைதியாக இருக்குமாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக இளைஞருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞரை எஸ்எஸ்ஏ ரஹீம் தாக்கினார். உடனே ஆவேசமான அந்த இளைஞர் பதிலுக்கு அப்துல் ரஹீமின் கன்னத்தில் அறைந்தார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அந்த இளைஞரை குண்டுக்கட்டாக தூக்கி ஜீப்பல் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அந்த இளைஞர் தஞ்சை அருகே விளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+