"உள்ளாடை".. பெட்ரூம் ஜன்னலில் ஜல் ஜல் ஜல்.. "அந்த" நைட்டி வேற.. முதல்ல கோவை.. இப்ப தஞ்சை.. ஹய்யய்யோ

நைட்டியை அணிந்து நடமாடும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டுகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: ஒரு வீட்டின் முன்பு பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, ஓவர்நைட்டில் டேமேஜ் ஆகி உள்ளது.. இதுகுறித்து ஆராய போனால், கடைசியில் பெரிய மேட்டரே சிக்கிகொண்டுவிட்டது..!!

2 வருடங்களுக்கு முன்பு, கோவை துடியலூர் பகுதியில் ஒரு வித்தியாசமான புகார் போலீசாருக்கு வந்தது.. அங்குள்ள மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் இந்த புகார்களை தந்திருந்தனர்.

எல்லாமே திருட்டு புகார்கள்தான்.. நிறைய திருட்டு சம்பவங்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் நடப்பதாக புலம்பியிருந்தார்கள்.. அதுவும், பெண்களின் உள்ளாடைகள் மட்டுமே மாயமாகி கொண்டிருந்தன..

 சமாச்சாரங்கள்

சமாச்சாரங்கள்

யார் எடுக்கிறார்கள், எப்போது எடுக்கிறார்கள் என்பது மட்டும் தெரியவே இல்லை.. இதுபோக சுடிதார், செருப்புகளும் மாயமாகி வந்தன.. காணாமல் போவது எல்லாமே பெண்கள் அணியும் சமாச்சாரங்கள்தான்.. அதனால் பலருக்கும் இது குழப்பத்தையும், பீதியையும் ஏற்படுத்தி வந்தது... போலீசார் ஒருபக்கம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென ஒரு வீட்டின் முன்பு ஏகப்பட்ட செருப்புகளும், நைட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை அந்த பகுதி மக்களே நேரடியாக பார்த்தனர்.. ஆனால் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது..

 உள்ளாடைகள்

உள்ளாடைகள்

அதனால் குடியிருப்புவாசிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்... அப்போதுதான் ஒரு பெண்மணி நடந்து வருவது அதில் பதிவாகி இருந்தது.. அவர் யாரென்று சட்டென்று அடையாளம் தெரியவில்லை.. உற்று பார்த்தபோதுதான், அவர் பெண் இல்லை, ஆண் என்பது தெரிந்தது. நைட்டி போட்டுக் கொண்டு.. காலில் கொலுசுடன் அந்த நபர் நடந்து வந்தார்... தெருவில் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகளை திருடி கொண்டு அசால்ட்டாக நடந்து கொண்டிருந்தார். வீடியோவில் இந்த காட்சியை பார்த்ததும் மக்கள் அரண்டு போய்விட்டனர்... திருடிய உள்ளாடைகள், செருப்புகளை எல்லாம் ஒதுக்குப்புறமாக குவித்து வைத்து, அந்த நபர் தீ வைத்து எரித்து வந்துள்ளார்.

 உள்ளாடை செருப்பு

உள்ளாடை செருப்பு

அந்த சைக்கோ திருடர் யார் என்று தெரியவில்லை.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு, இதே துடியலூரில் ஒரு நபர், நள்ளிரவு நேரங்களில் சுவர் ஏறி குதித்து.. குடியுருப்புவாசிகளின் பெட்ரூம்களை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து வருகிறார் என்ற புகார்கள் கிளம்பின.. அவர் யார் என்ற விசாரணையை போலீசார் சிசிடிவி கேமராவில் ஆராய்ந்தால், அந்த நபரும் நைட்டி அணிந்து கொண்டு நடமாடியதை பார்த்து அதிர்ந்தனர்.. இருவருமே ஒரே ஆள்தானா.. அல்லது வேறு வேறு நபர்களா என்ற விசாரணையையும் முடுக்கிவிட்டனர்.. இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், மீண்டும் நைட்டி மனிதர் அட்டகாசம் துவங்கி உள்ளது..

 நைட்டிமேன்

நைட்டிமேன்

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை பகுதி ரியாஸ் நகரில் சின்னதுரை என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்... சம்பவத்தன்று டியூட்டி முடித்துவிட்டு, தன்னுடைய மனைவியுடன் மாடியில் தூங்க சென்று விட்டார். வழக்கம்போல் காலை எழுந்து, வீட்டு வாசலை திறந்து பார்த்தபோது, அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா சேதமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. இதனால், உடனடியாக கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளார்..

 டவுசர் நைட்டி

டவுசர் நைட்டி

அப்போது, நைட்டி போட்டு கொண்டு ஒரு மர்ம நபரும், அரைக்கால் டவுசர் போட்டிருந்த இன்னொரு நபரும் வீட்டின் கதவை உடைத்துச் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பதிவாகி இருந்தது. ஆனால் வீட்டின் கதவை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லையாம்.. இந்த ஆத்திரத்தில்தான், கொள்ளையர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து சென்றுள்ளதாக தெரிகிறது.. இதுகுறித்து சின்னதுரை தமிழ் பல்கலைக்கழக போலீசில் புகார் அளித்துள்ளார்...

 உள்ளாடையை

உள்ளாடையை

மேலும் இந்த பகுதிகளில் நைட் நேரங்களில் நிறைய வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் புகார் சொர்லகிறார்கள்.. காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும், காவல் உதவி மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஒரே பகுதியில் நிறைய திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதால், அதே நைட்டி மனிதன்தான், இதையெல்லாம் செய்தாரா? என்றும் சந்தேகம் கிளம்பி உள்ளது.. திருட வருபவர்கள் எதற்காக நைட்டி அணிந்து கொள்கிறார்கள் என்ற சூட்சுமம்தான் புரியவேயில்லையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+