தஞ்சை மாநகராட்சி மேயர் யார்? திமுக இளைஞரணி கோட்டாவில் முந்தும் சண்.ராமநாதன்!
தஞ்சை: தஞ்சை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள சண்.ராமநாதன் முதலிடத்தில் இருக்கிறார்.
இவருக்கு போட்டியாக அஞ்சுகம் பூபதி, நீலகண்டன், சந்திரசேகரமேத்தா என பலர் காய்நகர்த்தினாலும் உதயநிதி ஸ்டாலினின் ஆசியுடன் மேயர் நாற்காலியில் அமரும் யோகம் சண்.ராமநாதனுக்கே இருப்பதாக கூறுகிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.
தஞ்சை நகராட்சியாக இருந்த போது ஏற்கனவே 2 முறை கவுன்சிலராக இருந்த இவர், தற்போது 3-வது முறையாக கவுன்சிலராக வெற்றிபெற்றிருக்கிறார்.

தஞ்சை மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 36 வார்டுகளில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்கிறது. இதையடுத்து தஞ்சை மேயர் பதவிக்கான போட்டி திமுகவில் வலுவாக உள்ளது. தஞ்சை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், மருத்துவர் அணி நிர்வாகி அஞ்சுகம் பூபதி, தஞ்சை மாநகர திமுக துணைச் செயலாளர் நீலகண்டன், மூத்த திமுக நிர்வாகியும், ஏற்கனவே கவுன்சிலராக இருந்தவருமான சந்திரசேகர் மேத்தா ஆகியோர் மேயர் பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தி வருகின்றனர்.

பெண்களுக்கு இல்லை
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், பொதுப்பிரிவில் வரும் தஞ்சை மேயர் பதவியானது அஞ்சுகம் பூபதிக்கு கிடைக்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு துணை மேயர் பதவி கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல் வயது மூப்பு காரணமாக சந்திரசேகர் மேத்தாவுக்கும் வாய்ப்பு குறைவு என்றும் அதேவேலையில் அவருக்கு மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர் பதவியோ அல்லது மண்டல தலைவர் பதவியோ வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

சண்.ராமநாதன்
நீலகண்டனா, சண்.ராமநாதனா என்கிற போது சண்.ராமநாதனுக்கே மேயர் பதவிக்கான வாய்ப்பு மிக அதிகம் எனக் கூறுகிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள். திமுக இளைஞரணியிலிருந்து ஒருவர் மேயராக வர வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் விரும்புவதால், சண்.ராமநாதன் இளைஞரணி கோட்டாவில் மேயர் நாற்காலியில் அமர்வார் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்டச் செயலாளர் துரை சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் ஆகியோரின் பரிந்துரையால் ராமநாதன் கரையேறி விடுவார் எனத் தெரிகிறது.

இரண்டு முறை
சட்டமன்றத் தேர்தலில் தஞ்சையில் போட்டியிட இரண்டு முறை சீட் கேட்டு நிராகரிக்கப்பட்டவர் ராமநாதன். தற்போது மூன்றாவது முறையாக கவுன்சிலராக வெற்றி பெற்றிருக்கும் இவர், ஏற்கனவே 2 முறை கவுன்சிலராக இருந்திருக்கிறார். இது இவருக்கு கூடுதல் பலமாக இப்போது அமைந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications