தஞ்சாவூர் மாணவி வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை.. அண்ணாமலைக்கு சிக்கல்? எஸ்டிபிஐ அரசுக்கு கோரிக்கை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாணவி லாவண்யா வழக்கில் சிபிஐ சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கை, பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளால் தமிழகத்தில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட மிகப்பெரிய மதவாதப் பொய்க்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த மரணத்திற்கு 'மதமாற்ற முயற்சி' காரணம் அல்ல என்பதை சிபிஐ குற்றப்பத்திரிக்கை அம்பலப்படுத்தி உள்ளது என்று எஸ்டிபிஐ விமர்சித்துள்ளது.இந்த விவகாரத்தில் பாஜகவின் மதவாத அரசியலை சிபிஐ அம்பலப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா, கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ விளக்கம்
இந்த வழக்கில் தொடக்கத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்த "மதமாற்ற வற்புறுத்தல்" குறித்து சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் உறுதியான ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. மாணவியை மதம் மாறச் சொல்லி பள்ளி நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததற்கான நேரடி சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என்று சிபிஐ கூறியுள்ளது.
மதவாதப் பொய்க்கு முற்றுப்புள்ளி
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தஞ்சாவூர் மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கில் சிபிஐ சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கை, பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளால் தமிழகத்தில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட மிகப்பெரிய மதவாதப் பொய்க்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
'மதமாற்ற முயற்சி' காரணம் அல்ல
இந்த மரணத்திற்கு 'மதமாற்ற முயற்சி' காரணம் அல்ல என்பதையும், மாணவி எந்த இடத்திலும் மதமாற்றம் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்பதையும் சிபிஐ ஆதாரங்களுடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாணவியின் மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயன்ற பாஜகவின் கீழ்த்தரமான மதவெறுப்பு அரசியல் உலகிற்கு அம்பலமாகியுள்ளது.
அண்ணாமலை ஏற்படுத்திய சவால்
பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி இது 'மதமாற்றத் தற்கொலை' என்று முத்திரை குத்தி, தமிழகத்தின் அமைதிக்கும் மத நல்லிணக்கத்திற்கும் பெரும் சவாலை ஏற்படுத்தினர். மகளை இழந்து துயரத்தில் இருந்த பெற்றோரை ஆறுதல்படுத்தாமல், அவர்களைத் தவறாக வழிநடத்தி, மகளின் உடலைப் பெறவிடாமல் தடுத்து போராட்டக் களத்திற்கு இழுத்து வந்த பாஜக தலைவர்களின் செயல் அப்பட்டமான மனிதநேயமற்ற செயலாகும்.
அவதூறு முத்திரை
தமிழகத்தில் பல தசாப்தங்களாகக் கல்விச் சேவை ஆற்றி வரும் சிறுபான்மை கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீது 'மதமாற்றக் கூடம்' என்ற அவதூறு முத்திரையைக் குத்த பாஜக மேற்கொண்ட சதித்திட்டம் இன்று தவிடுபொடியாகியுள்ளது. அந்தப் பள்ளியில் பயின்று வெளியேறிய முன்னாள் மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், ஒருவர் கூட மதம் மாறவில்லை என்பது சிபிஐ விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், கல்வி நிலையங்களுக்குள் மதவாத விஷத்தைப் பாய்ச்சி சமூகத்தைப் பிளவுபடுத்த நினைக்கும் சங்பரிவாரங்களின் போலி முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அண்ணாமலை மீது வழக்கு
எனவே, ஒரு தற்கொலையை மதக் கலவரமாக மாற்றத் தூண்டியவர்கள் மீதும், ஆதாரமற்ற பொய்ப் புகார்களைப் பரப்பி சமூகப் பதற்றத்தை உருவாக்கிய பாஜக தலைவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் தமிழக அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
நன்னிலம் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications