கும்பகோணத்தில் பூரித்த காடேஸ்வரா.. தஞ்சையில் சொன்னதை கேட்டீங்களா? செம மதுரை முருக பக்தர்கள் மாநாடு
தஞ்சாவூர்: இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும். இந்துக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக அரசியல் சார்பு இல்லாமல் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடத்தப்பட உள்ளதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது.. அத்துடன் திமுக அமைச்சர் 2 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி காடேஸ்வரா சுப்பிரமணியம், "மதுரையில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

அப்பாயிண்ட்மென்ட்
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுக்க அவரை நேரில் சந்திக்க அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு இதுவரை பதில் வரவில்லை. முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அரசும், போலீஸாரும் பல்வேறு நெருக்கடிகளை தந்து வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி, அமைச்சர் துரைமுருகன், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மடாதிபதிகள், ஆன்மிகப் பெரியவர்கள் என ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முருக பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வது இன்னும் உறுதியாகவில்லை. கலைத் துறையைச் சேர்ந்த பலருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
கும்பகோணத்தில் காடேஸ்வரா
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன்.. அப்போது பல்வேறு தகவல்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
சுப்பிரமணியன் சொல்லும்போது, "மதுரை, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும், பாத யாத்திரை குழுக்களையும், விளம்பர வாகனத்தையும் போலீசார் தடுக்கிறார்கள்.. செல்லக்கூடாது என்றும் மிரட்டுகிறார்கள்..
விரதம் இருக்கும் அமைச்சர்
தமிழக அரசு சார்பில், முருகனுக்கு பழனியில் மாநாடு நடத்தினார்கள்.. அதனை முழுக்க முழுக்க அரசியல் மாநாடாகவே நடத்தினார்கள்.. ஆனால், மதுரையில் நாங்கள் நடத்தப்போகும் மாநாடு, அரசியல் சார்பற்ற ஆன்மீக மாநாடு ஆகும்.. மதுரை முருக பக்தர்கள் மாநாடு என்பது, இந்துக்களை ஒருமைப்படுத்தும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தக்கூடிய மாநாடாக அமையும்.
இந்த மாநாட்டிற்கு அனைவரையும் போல முதல்வரும் வரவேண்டும். அதற்காக, முதல்வருக்கும் அழைப்பிதழ் கொடுக்க விரும்பினோம். நேரம் கேட்டிருக்கிறோம்.. அனுமதி கிடைத்தால், அவரையும் நேரில் சென்று அழைப்போம்...
முருக பக்தர்கள் மாநாடு
முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நாகேந்திரன் இருவருமே விரதம் மேற்கொண்டு, மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். ஆனால், இந்த முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே அமைச்சர் சேகர்பாபு முருகக் கடவுளிடம் வேண்டி விரதம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
திமுக அதன் கூட்டணியில் உள்ளவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், மாநாட்டுக்கு வர வேண்டும் என்பதற்காகவே, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு ஆகியோருக்கு அழைப்பிதழ்களை தந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications