தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகின் எடை குறைந்த செயற்கைகோளை உருவாக்கிய தஞ்சை மாணவர்.. ஜூனில் விண்ணுக்கு அனுப்பும் நாசா

Google Oneindia Tamil News

தஞ்சை: தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவர் ரியாஸ்தீன் வடிவமைத்த உலகின் எடை குறைந்த செயற்கைக்கோள்களை 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விண்வெளிக்கு நாசா அனுப்பவுள்ளது.

Recommended Video

    உலகின் எடை குறைந்த சாட்டிலைட்டுகள்.. நாசாவையே அசத்திய தமிழக மாணவர்கள் - வீடியோ

    தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ரியாஸ்தீன். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார்.

    இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த I Doodle Learning நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து cubes in space என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது.

    உடனடி கடன் செயலிகளைப் பயன்படுத்தும் நபரா நீங்கள்? உங்கள் தரவுகள் திருடப்படலாம்உடனடி கடன் செயலிகளைப் பயன்படுத்தும் நபரா நீங்கள்? உங்கள் தரவுகள் திருடப்படலாம்

    73 நாடுகள்

    73 நாடுகள்

    அதன்படி இவர் 2019-2020 காண போட்டியில் கலந்து கொண்டு தேர்வாகியுள்ளார். இவர் கண்டுபிடித்த இந்த Femto சாட்டிலைட்களும் நாசாவில் இருந்து வரும் 2021ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. 73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சாட்டிலைட்

    சாட்டிலைட்

    இந்த கண்டுபிடிப்புக்கான போட்டிகளில் இரண்டு சாட்டிலைட்டுகளை வடிவமைத்து நாசாவிலிருந்து ஏவ இந்த மாணவர் தேர்வாகியுள்ளார். இந்த சாட்டிலைட்களுக்கு விஷன் சாட் V1 மற்றும் V2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு சாட்டிலைட் 33mm உயரமுடையது மற்றும் 33 கிராம் எடையுடையது.

    தெர்மோ பிளாஸ்டிக்

    தெர்மோ பிளாஸ்டிக்

    இந்த இரு சாட்டிலைட் உலகிலேயே மிகவும் எடை குறைவான பெம்டோ செயற்கைக்கோள்கள் ஆகும். இந்த இரு சேட்டிலைட் ஆனது பாலி எதரி இமைடு அல்டம் என சொல்லக்கூடிய தெர்மோ பிளாஸ்டிக்கை கொண்டு 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    இந்த இரு சாட்டிலைட்டுகளும் தொழில்நுட்பம் சோதனை செயற்கை கோள்கள் ஆகும் சாட்டிலைட் நோக்கமானது Atmospheric and space studies and microgravity material research ஆகும். இதில் 11 சென்சார்கள் உள்ளன. அதன் மூலம் 17 parameter களை கண்டறிய முடியும் இவை இரண்டும் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நாசாவில் சவுண்டிங் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக மாணவர் ரியாஸ்தீன் தெரிவித்தார்.

    English summary
    World's less weight Satellite was designed by Tanjore student and it will be sent to space by June 2021 by Nasa.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X