உங்கள் அன்பு, ஆதரவு, மற்றும் ஆசியுடன் மகத்தான வெற்றி சாத்தியமாகும்… ஹெச்.ராஜா ட்விட்
தஞ்சை: சிவகங்கை தொகுதியில் போட்டியிட நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 25 ம் தேதி திங்கட்கிழமை மதியம் 12.00 to 1.00 மணிக்கு சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளராக வேட்புமனுத்தாக்கல் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உங்கள் அன்பு, ஆதரவு, மற்றும் ஆசியுடன் மகத்தான வெற்றி சாத்தியமாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜக கூட்டணி தமிழகத்தில் 35 இடங்களில் வெற்றி பெறும் என்றார். அதே போல், திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஜாதகம் பார்த்தேன். இந்த கூட்டணிக்கு கொஞ்சம் கூட வெற்றி வாய்ப்பு கிடையாது. இவர்களில் தேர்தலில் வெற்றிபெற சிறிய வாய்ப்பு கூட கிடையாது.
25 ம் தேதி திங்கப்கிழமை மதியம் 12.00 to 1.00 சிவகங்கை நாடாளுமன்ற வேட்பாளராக வேட்புமனுத்தாக்கல் செய்கிறேன் உங்கள் அன்பு, ஆதரவு, மற்றும் ஆசியுடன் மகத்தான வெற்றி சாத்தியமாகும்.
— Chowkidar H Raja (@HRajaBJP) March 23, 2019
ஜோசியர்கள் இதைத் தான் சொல்கிறார்கள். அதனால் பாஜக - அதிமுக கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும் என்று ஹெச். ராஜா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications