சிறை காவலர்களை தாக்கிவிட்டு.. தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்.. நள்ளிரவில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்ட சிறையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. காவலர்களை தாக்கிவிட்டு விசாரணைக் கைதிகள் தப்பி ஓடியதாகவும், தப்பி ஓடிய விசாரணை கைதிகள் பலரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட சிறையில் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு 15 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள் கிழமை இரவு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Theni prison after attacking guards-a shocking midnight inciden

17 சிறைக்கைதிகள் தப்பி ஓட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில்தான், திங்கள் கிழமை இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக் காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

காவலர்களை தாக்கிவிட்டு, சுமார் 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, உடனடியாக மாவட்ட எஸ்பி, மாவட்டம் முழுவதும் போலீசாரை உஷார்படுத்தினார். சிறைச்சாலை அமைந்துள்ள தேக்கம்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தீவிர தேடுதல் வேட்டை

தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. மாவட்ட சிறை அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. சுற்றளவை சுற்றி வளைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, '15-க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரே நேரத்தில் தப்பி ஓடியதாக முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளது.

அதன்பேரில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தப்பி ஓடியவர்கள் எந்தெந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள்? எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்ற விவரங்களை சேகரித்து தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது' என்றனர். தப்பி ஓடியவர்களில் பெரும்பாலானோர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுவதால், விழுப்புரம் பகுதிகளிலும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லையா?

தமிழகத்தில் நாள்தோறும் குற்ற செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறையில் இருந்து போலீசாரை தாக்கிவிட்டு, கைதிகள் தப்பி ஓடியதாக கூறப்படும் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல்தான் நிலவுகிறதா? என்றும் மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+