தேனி உழவர் சந்தையில் 5 அடி நீள முருங்கைக்காய்.. திடீர்னு குவிந்த கம்பம்.. இப்படி வளர என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் கம்பம் உழவர் சந்தையில் சுமார் 5 அடி நீளமுள்ள முருங்கைக்காய்கள் விற்பனைக்கு வந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதாரணமாக நாம் கடைகளிலும் சந்தைகளிலும் பார்க்கும் முருங்கைக்காய்களை விட பல மடங்கு நீளமாக இருந்ததால், இதை பார்த்தவர்கள் ஆச்சரியத்துடன் வாங்கிச் சென்றனர். இந்த சம்பவம்தான் தேனி மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

தேனி மாவட்டம் கம்பத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இங்கு தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்து வருகிறார்கள்..

Theni Drumstick 5 Feet Drumstick Moringa Farming

புரோக்கர்கள் யாருமே இல்லாமல் விற்பனை நடைபெறுவதுடன், வேளாண் துறை சார்பில் தினமும் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் காய்கறிகளை வாங்க முடிகிறது.

இதன் காரணமாக கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாமல், பக்கத்திலுள்ள கேரளாவிலிருந்தும் வியாபாரிகள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள்.. குறிப்பாக கேரளாவுக்கு காய்கறிகள் அதிக அளவில் செல்லும் நிலையில், கம்பம் பகுதி உழவர் சந்தை முக்கியமானதாக இருந்து வருகிறது.

கம்பம் உழவர் சந்தை ஆச்சரியம்

இந்நிலையில், நேற்று கம்பம் உழவர் சந்தைக்கு வழக்கத்திற்கு மாறாக சுமார் 5 அடி நீளமுள்ள முருங்கைக்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவை பார்ப்பதற்கே மிகவும் நீளமாகவும் வித்தியாசமாகவும் இருந்தன. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. முருங்கைக்காயின் அளவை பார்த்த பொதுமக்களும், கேரள வியாபாரிகளும் ஆர்வத்துடன் வாங்கி சென்றார்கள்.

பொதுவாக முருங்கைக்காய் என்றாலே ஒரு குறிப்பிட்ட அளவில்தான் இருக்கும்.. ஆனால், ஒரு முருங்கைக் காயே 5 அடி வரை நீளமாக இருந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்தவர்கள், அந்த முருங்கைக்காய்களை அருகில் சென்று பார்த்து, அதன் நீளத்தை வியந்து பார்த்தனர். சிலர் ஆர்வத்துடன் வாங்கியும் சென்றனர்.

5 அடி நீள முருங்கைக்காய் வளர காரணம்?

முருங்கைக்காயின் நீளம் என்பது அது எந்த வகை முருங்கை மரம், விதையின் தன்மை, மண்ணின் தன்மை, தண்ணீர் வசதி, உரம் மற்றும் மரத்தின் பராமரிப்பு போன்ற பல விஷயங்களைப் பொறுத்து மாறுபடும். சில முருங்கை வகைகள் இயல்பாகவே மற்ற வகைகளை விட நீளமான காய்களை கொடுக்கும்.

போதுமான சத்தும், தண்ணீரும் கிடைத்து, செடி நல்ல வளர்ச்சியுடன் இருந்தால் காய்களும் அதிகமாக வளர வாய்ப்பு உள்ளது. இதனால் 5 அடி நீளமுள்ள முருங்கைக்காய் என்பது வழக்கமான அளவை விட மிகவும் பெரியதாக இருந்தாலும், சில குறிப்பிட்ட வகைகள் மற்றும் நல்ல சாகுபடி சூழலில் இதுபோன்ற நீளமான காய்கள் கிடைக்கலாம் என்கிறார்கள் வியாபாரிகள்..

தேனி கண்ணதாசன் தோட்டம் நினைவிருக்கா

இதே தேனியில் சில மாதங்களுக்கு முன்பும் இப்படித்தான் ஆச்சரிய சம்பவம் நடந்தது.. கம்பத்தில், சுருளிப்பட்டி சாலை பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்ற ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்..

இவரது தோட்டத்தில், 6 அடி நீளத்துக்கு முருங்கைக்காய்கள் காய்த்தன.. உடனே இந்த முருங்கைக்காய்களை கண்ணதாசன் தினமும் பறித்து, தனது டீக்கடையில் காட்சிப்பொருளாக தொங்கவிட்டுள்ளார்.. டீக்கடைக்கு வருபவர்கள், அந்த முருங்கைக்காய்களை செல்பி எடுத்து கொண்டு போனார்கள்.

முன்னதாக புதுச்சேரியிலும் இப்படித்தான், இயற்கை முறையில் பராமரிக்கப்பட்ட முருங்கை மரத்தில் 5 அடி நீளமுள்ள காய்கள் கிடைத்ததாக செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற 5 அடி, 6 அடி நீளத்துக்கு காரணம், ஒட்டுவகையை சேர்ந்த முருங்கையாக இருக்கலாம் என்று தோட்டத்துறை அதிகாரிகள் சொல்வதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+