ஆணுறுப்பை பிளேடால் வெட்டி எடுத்த கட்டிட தொழிலாளி! ரத்தம் சொட்ட மருத்துவமனையில் அனுமதி.. தேனியில் ஷாக்
தேனி: தேனியில் கட்டிட தொழிலாளி ஒருவர் தனது ஆணுறுப்பை வெட்டி தனியாக எடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சரவணன். கட்டிட தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. தினமும் வேலை முடித்துவிட்டு குடித்துவிட்டே வீட்டு வருவார். தொடர் குடி காரணமாக இருவருக்கும் இவரது குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் இவர் குடியை விடுவதாக இல்லை. தொடக்கத்தில் வாரத்திற்கு ஒரு முறை குடித்த அவர், பின்னர் தினமும் குடித்து அதற்கு அடிமையாகி இருக்கிறார்.

குடித்துவிட்டு வீட்டில் சண்டை போடுவது மட்டுமல்லாது வெளியில் இருந்தும் சில பஞ்சாயத்துகளை இழுத்து வந்துள்ளார். சில நேரங்களில் இந்த பஞ்சாயத்துகளால் பலத்த அடியும் வாங்குவதுண்டு. அப்படி ஒரு முறை கடுமையான காயங்களுடன் பக்கத்து ஏரியாவில் விழுந்து கிடக்க அக்கம் பக்கத்தினர் சொல்லியதால் குடும்பத்தினர் சரவணனை மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கின்றனர். கடுமையான போதை பழக்கம், அக்கம் பக்கம் பஞ்சாயத்து, குடும்பத்தில் தகராறு என பிரச்னை மேல் பிரச்னை வந்ததால் சரவணனை குடும்பத்தினர் கண்டுக்கொள்ளாமல் விட்டிருக்கின்றனர்.
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சரணவன் ஒரு சில நாட்கள் ஒயின்ஷாப் பக்கம் போகாமல் இருந்திருக்கிறார். ஆனால் எல்லாம் 4 நாட்கள்தான். அதன் பின்னர் நிலைமை கையை மீறி சென்றிருக்கிறது. சரவணன் மீண்டும் குடிக்க தொடங்கியுள்ளார். இந்த முறை பஞ்சாயத்து வீட்டிலோ, அக்கம் பக்கத்திலோ வரவில்லை. மாறாக வேலை செய்யும் இடத்தில் வந்திருக்கிறது. என்ன பிரச்னை? என்றே தெரியாமல் மாற்றி மாற்றி அடித்துக்கொள்ள தொடங்கியுள்ளனர். பின்னர் சக தொழிலாளிகள் இவர்களை சமாதானம் செய்துள்ளனர். இது நடந்து இரண்டு நாட்கள் இருந்திருக்கும். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரச்னை தலைத்தூக்கியுள்ளது.
இது சரவணனின் உயிருக்கே ஆபத்தாக போய் முடியும் நிலையில் இருந்திருக்கிறது. அதாவது சரவணன் திடீரென பிளேடை எடுத்து தனது ஆணுறுப்பை அறுத்து துண்டாடிக்கியுள்ளார். இதை பார்த்த சக தொழிலாளிகள் அதிர்ச்சியடைந்து அவரை கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உடலில் ரத்த ஓட்டம் அதிகம் உள்ள பகதிதான் ஆணுறுப்பு. இதனை சரவணன் வெட்டி துண்டாக எடுத்திருக்கிறார். அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளதால் அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தெடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தேனி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் தற்செயலாக இதுபோன்று செய்துகொண்டாரா? அல்லது வேறு யாரேனும் இதை செய்ய சோல்லி தூண்டினார்களா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே இவரிடம் தகராறில் ஈடுபட்ட நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications