மூணாறில் ட்ரோன்கள் மூலம் புதிய புரட்சி.. மிகப்பெரிய கனவுகள் சாத்தியமாவது உறுதி

Subscribe to Oneindia Tamil

தேனி: ஆர்பிஎஸ்இ குழும நிறுவனமான ஹாரிசன்ஸ் மலையாளம் லிமிடெட் (HML), கேரளாவில் உள்ள தனது இடுக்கி மூணாறு லோ ஹார்ட் எஸ்டேட்டில், புதிதாக அறுவடை செய்யப்பட்ட பச்சைத் தேயிலையை, தேயிலைத் தோட்டங்களிலிருந்து எடை மையங்களுக்கும் தொழிற்சாலைக்கும் "ட்ரோன்கள்" மூலம் கொண்டுசெல்லும் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

"ட்ரோபோவொர்க்ஸ்" உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, கள தளவாடங்களை மேம்படுத்துதல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், மனிதக் கையாளுதலைக் குறைத்தல் மற்றும் வயலிலிருந்து தொழிற்சாலைக்கு பச்சைத் தேயிலையை விரைவாகக் கொண்டுசெல்வதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

A New Revolution via Drones in Munnar Grand Dreams Set to Become Reality

10 கிலோ முதல் 20 கிலோ எடையுள்ள தேயிலை மூடைகளை கொண்டு செல்லும் ஆரம்பகட்ட சோதனைகள் ஊக்கமளிக்கும் முடிவுகளைத் தந்துள்ளதாம். இது, தேயிலைத் தோட்டங்களில் பொருட்களின் போக்குவரத்தை மாற்றியமைப்பதில் பேலோட் ட்ரோன்களின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறது என்றும்
மேலும் சரிபார்ப்புகளுக்குப் பிறகு, வழக்கமான பச்சைத் தேயிலைக் கொண்டுசெல்லும் பணிகளுக்காக பேலோட் ட்ரோன்களைப் பயன்படுத்தும் முதல் தேயிலைத் தோட்ட நிறுவனங்களில் ஒன்றாக HML திகழும் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தனது தேயிலை செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கிய, தனது தேயிலைத் தோட்டங்கள் முழுவதும் 100 சதவீதம் பேட்டரி மூலம் இயங்கும் அறுவடையை அறிமுகப்படுத்திய, மற்றும் தேயிலை மற்றும் ரப்பர் செயல்பாடுகளுக்காக ட்ரோன்களை விரிவாகப் பயன்படுத்திய முதல் பெரிய தோட்ட நிறுவனங்களில் ஹாரிசன்ஸ் மலையாளம் லிமிடெடும் ஒன்றாகும்.

ஹாரிசன்ஸ் மலையாளம் லிமிடெட் நிறுவனத்தின் இந்த முயற்சியின் காரணமாக இனி மலைப்பாங்கான, செங்குத்தான தேயிலைத் தோட்டங்களில் 10 முதல் 20 கிலோ எடையுள்ள பச்சைத் தேயிலை மூடைகளை தொழிலாளர்கள் சுமந்து வர தேவையில்லை. வாகனங்கள் நிற்கும் இடங்களுக்கும் செல்வது தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய உடலழைப்பு இந்த ட்ரோன்கள் மூலம் குறையும்.

அதேபோல் மூணாறில் தேயிலை தோட்டங்களில் பாதை கரடு முரடாகவே இருக்கும். அத்துடன் அட்டைப் பூச்சிகள், பாம்புகள் மற்றும் காட்டு யானைகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகளின் தொல்லை அதிகம். இனி சுமையுடன் வந்து பாதைகளில் வழுக்கி விழுதல், காயங்கள் ஏற்படுவது குறைந்து போகும். அதேபோல் தொழிலாளர்கள் தேயிலை பறிப்பவர்களாகவும், வெறும் சுமை தூக்குபவர்களாக இல்லாமல், ட்ரோன்களை இயக்கும் பயிற்சி பெற்று தங்களை அடுத்த கட்டத்திற்கு உயருவார்கள்.

A New Revolution via Drones in Munnar Grand Dreams Set to Become Reality

நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபகரமாக இருக்க போகிறது. ஏனெனில் தேயிலை பறிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் தொழிற்சாலைக்குச் சென்றுவிடும். தாமதமானால் தேயிலை நொதித்து அதன் தரம் குறைந்துவிடுகிறது. ட்ரோன்கள் மூலம் உடனே போவதால், தரம் உயர்தரமாக இருக்கும். நிறுவனத்திற்கு பெரிய லாபகரமாக இருக்கும். அதேபோல் மூணாறு போன்ற மலைப்பாதைகளில் லாரிகள் அல்லது டிராக்டர்களை இயக்கும் போது எரிபொருள் செலவு, பராமரிப்புச் செலவு மிக அதிகம். ஆனால் பேட்டரி மூலம் இயங்கும் ட்ரோன்களைப் பயன்படுத்துவதால் செலவு பெரிய அளவில் குறையும். வரும் காலத்தில் தேயிலைகளை ட்ரோன்கள் மூலம் நேரடியாக மலையில் இருந்து அடிவாரத்தில் உள்ள போடிநாயக்கனூருக்கே கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+