பிரதமரின் கிசான் சம்மன்.. 2000 ரூபாய் வாங்கிட்டீங்களா.. தபால் துறை சூப்பர் அறிவிப்பு
தேனி: பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-வது தவணைத் தொகை ரூ.2 ஆயிரம் பெறுவதற்கு தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் 17வது தவணை தொகையை விவசாயிகளுக்கு வழங்கிட ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார். இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகளுக்கு 2000 ரூபாயை அவர்களது வங்கி கணக்கில் வழங்க 20,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக நேற்று முன்தினம் 2000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2000 ரூபாய் வணத்தை எடுத்துக்கொள்ள வசதியாக தபால் அலுவலகங்களில் சிறப்பு முகாம் வரும் ஜூன் 30ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17-வது தவணைத் தொகை ரூ.2 ஆயிரம், நேற்று முன்தினம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தவணைத் தொகையை தபால் துறையில் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி வசதியை பயன்படுத்தி அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் கட்டணம் இன்றி எடுத்துக் கொள்ளலாம்.
பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் இணைத்துள்ள எந்த ஒரு வங்கிக் கணக்கில் இருந்தும் அருகில் உள்ள தபால் அலுவலகங்கள், தபால்காரர், கிராமிய தபால் ஊழியர்கள் மூலம் கட்டணம் இன்றி ரூ.10 ஆயிரம் வரை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக வருகிற 30-ந் தேதி வரை அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.
இது தவிர இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் வேலை உறுதித் திட்ட பயனாளிகள், முதியோர் ஓய்வூதியம், மகளிர் உரிமைத்தொகை, விதவைகள் உதவித்தொகை, மாற்றுத் திறனாளி ஊக்கத்தொகை மற்றும் அனைத்து சமூக பாதுகாப்பு திட்டப் பயனாளிகள், சிலிண்டர் மானிய பயனாளிகள், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்ட பயனாளிகள் ஏ.டி.எம். எந்திரத்தை தேடிச் செல்லும் நிலையை தவிர்த்து அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் கட்டணம் இன்றி பணம் எடுக்கலாம்" இவ்வாறு தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்றால் என்ன: பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PIV-KISAN) என்பது ஒரு மத்திய அரசின் திட்டம் ஆகும். இது நாட்டில் உள்ள நிலம் வைத்திருக்கும் ஏழை விவசாயி குடும்பங்களுக்கும் விவசாய தேவைகள் மற்றும் தனிப்பட்ட செலவுக்காக ஆண்டுக்கு 6000 ரூபாய் வருமான உதவியை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு 6000 வழங்கும் செலவை மத்திய அரசு முழுமையாக ஏற்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications