"அறிவு இருக்கா?" செய்தியாளர் கேள்வியால் டக்கென டென்ஷன் ஆன நடிகர் ஜீவா.. தேனியில் வாக்குவாதம்!
தேனி: தேனியில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகர் ஜீவா, செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள திரையுலகில் ஏற்பட்டுள்ள பாலியல் புகார் பிரச்சனை குறித்த செய்தியாளரின் கேள்வியால் டென்ஷன் ஆன ஜீவா, “அறிவு இருக்கா?” எனக் கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
ஈ, ராம், என்றென்றும் புன்னகை, முகமூடி, ஜிப்ஸி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஜீவா. தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். ஜீவா நடித்த 'பிளாக்' என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். பாலசுப்ரமணியன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்கு நடிகர் ஜீவா அழைக்கப்பட்டு இருந்தார். இந்த நிகழ்வில் பங்கேற்க தேனி வந்த நடிகர் ஜீவா, ஜவுளிக்கடையைத் திறந்து வைத்துவிட்டு அங்கு திரண்டிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து, செய்தியாளர்கள் நடிகர் ஜீவாவிடம் கேரளாவில் பூதாகரமாகி வரும் நடிகைகள் பாலியல் புகார் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கேரளாவைப் போல தமிழ் திரையுலகில் பாலியல் சர்ச்சை இல்லை எனவும், இந்த கேள்விக்கு ஏற்கனவே தான் பதில் அளித்திருப்பதாகவும், நல்ல நிகழ்விற்கு வந்த தன்னிடம் இது போன்ற அபசகுனமான கேள்விகளை கேட்க வேண்டாம் எனக் கூறினார்.

“நீங்கள் நடிகர் என்பதால் தான் ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து கேரள திரையுலகில் எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி கேட்டோம்” என்று செய்தியாளர் கேட்டதற்கு கோபமடைந்த நடிகர் ஜீவா, “திரும்ப திரும்ப பதில் சொல்ல முடியாது.. உனக்கு அறிவு இருக்கா?” என ஒருமையில் பேசினார்.
இதனால் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் நடிகர் ஜீவாவை சமாதானப்படுத்தி பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications