Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெற்றியில் விபூதி குங்குமம்.. ஊர்வலத்தில் சோக பாடல்.. கண்ணீர் கடலில் காற்றோடு கலந்தார் மாரிமுத்து!

Subscribe to Oneindia Tamil

தேனி: மறைந்த நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் உடல் அவருடைய சொந்த ஊரான பசுமலைத்தேரியில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்தவர் நடிகர் மாரிமுத்து. தேனி மாவட்டம் வருசநாடு பசுமலைத்தேரி கிராமத்தை சேர்ந்தவர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் 10ஆம் வகுப்பு வரை அங்குள்ள அரசு பள்ளியில் படித்தார்.

Actor Marimuthus body to be cremated at his native place

இதையடுத்து பாலிடெக்னிக்கை சிவகங்கையில் உள்ள கல்லூரியில் முடித்திருந்தார். இவரது தாய் தனது திருமாங்கல்யத்தை விற்று படிக்க வைத்தார். இந்த நிலையில் படிப்பை முடித்ததும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என முடிவெடுத்தார் மாரிமுத்து.

இந்த ஆசையை வீட்டில் பெற்றோரிடம் சொன்னால் எங்கே விட மாட்டார்களோ என நினைத்த அவர் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். எனினும் வீட்டின் சுவரில் கரிக்கட்டையால் தான் சென்னை செல்வதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் எழுதிவைத்துவிட்டு சென்றுவிட்டார்.

இதனால் தனது தந்தைக்கு தன் மீது கோபம் என மாரிமுத்து தனது பேட்டிகளில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சினிமாவில் உதவி இயக்குநர், வசன கர்த்தா, இயக்குநர், நடிகர், குணச்சித்திர நடிகர், டிவி சீரியல் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்தார். இந்தாம்மா ஏய் என பேசி பிரபலமடைந்தார்.

வில்லனாக நடித்தாலும் பலரது மனதில் இடம்பெற்றிருந்தார். அந்த சீரியலே மாரிமுத்துவின் நடிப்பிற்காகவே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்தது எனலாம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு மாரடைப்பு வந்த நிலையில் அவருடைய இதயத்தில் இரு ஸ்டன்ட் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

500 எபிசோடுகளை கடந்த எதிர்நீச்சல் சீரியலுக்காக நேற்று டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். நேற்று அவருடைய உடல் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு எதிர்நீச்சல் குடும்பத்தினர், அவருடன் நடித்தவர்கள், இயக்குநர்கள் வசந்த், எஸ் ஜே சூர்யா, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று மாலை அவருடைய உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவருடைய உடல் சொந்த ஊரான பசுமலை்தேரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது உடல் சொந்த வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு மாரிமுத்துவுடன் படித்தவர்கள், நண்பர்கள், ஊர் மக்கள், குடும்பத்தினர் என கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. தேர் போன்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக சென்றது.

அவருடைய நெற்றியில் விபூதி , குங்குமம் இடப்பட்டிருந்தது. அவரது ஊர்வலத்தின் போது சோக பாடல் ஒலிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவருடைய உடலுக்கு குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டிய சடங்குகள் நடத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அங்கு நடிகர் விமல் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மாரிமுத்துவின் மகனுக்கு கட்டி தழுவி ஆறுதல் கூறினார்.

இதையடுத்து அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. உடலுக்கு அவருடைய மகன் இறுதி சடங்குகளை செய்தார். அவருடைய சொந்த ஊரில் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர். இனி எப்போது கேட்போமோ "இந்தாம்மா ஏய்"...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+