எதுக்குண்ணே அழறீங்க.. சரி சரி இலைக்கே போடறோம்.. முகத்தை தொடைங்க முதல்ல.. ஆண்டிப்பட்டி கலகல!
ஆண்டிப்பட்டி: "அண்ணே.. ஓட்டு கேட்க வந்துட்டு எதுக்கு அழறீங்க.. சொல்லிட்டு அழுங்க.. இப்படியெல்லாம் வந்து அழக்கூடாது.. நாங்க இலைக்கே ஓட்டு போட்டுடறோம்.. நீங்க அழாதீங்க" என்று கிராம மக்கள் வேட்பாளருக்கு ஆறுதல் சொன்ன கூத்து ஆண்டிப்பட்டியில் நடந்துள்ளது!
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் சமாச்சாரத்தில் ஆரம்பத்திலிருந்தே விசேஷம் என்னவென்றால் அண்ணன்-தம்பி ஜோடி வேட்பாளர்கள்தான்! திமுக சார்பில் மகாராஜன், அதிமுக லோகிராஜன்.. இவர்கள்தான் அந்த ஒரே குடும்ப வேட்பாளர்கள்! இருவருமே உடன்பிறந்த சகோதரர்கள்! அண்ணன் மகாராஜன். தம்பி லோகிராஜன்!
இதனால் சீட் கொடுத்ததில் இருந்தே இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்ற ஆர்வம், பரபரப்பு, துடிதுடிப்பு எல்லாம் தொகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மறவட்டி
இப்போது நியூஸ் தம்பி வேட்பாளர் லோகிராஜனை பற்றியதுதான்! நேற்று தேனி பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது மறவட்டி என்ற பகுதியில் ஜீப் நுழைந்தது. அவ்வளவுதான்.. லோகிராஜன் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

குலுங்கி அழுதார்
வேட்பாளர் வந்துவிட்டார் என்று கிராமமே திரண்டு வந்து பார்த்தால், அவர் ஓட்டு கேட்காமல் குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார். இதனால் கிராம மக்கள் மட்டுமல்லாமல், கூடவே ஜீப்பில் வந்த தொண்டர்களுக்கும் எதுவுமே புரியவில்லை.

அழாம சொல்லுங்க
அதனால் ஊர் மக்கள், "அண்ணே.. ஏன் அழறீங்க.. ஓட்டு கேட்க வந்துட்டு இப்படியெல்லாம் அழக்கூடாது.. என்னன்னு அழாம சொல்லுங்க.. இங்க எல்லாரும் ரெட்டை இலைதான்.. அதுக்குதான் ஓட்டு போடுவாங்க.. நீங்க அழாதீங்க" என்றார்.

அம்மா ஞாபகம்
அதன்பிறகு அழுகையை அடக்கிய வேட்பாளர் கண்களை துடைத்து கொண்டு, "ஒன்னுமில்லை.. எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்துடுச்சு.. என்னை பெத்த அம்மாவோட சொந்த ஊர் இந்த மறவட்டிதான்" என்று சொல்லவும், திரும்பவும் கதறி அழுதார். உடனே அங்கிருந்தவர்கள், அவரை ஆசுவாசப்படுத்தி, சமாதானம் செய்து ஒருவழியாக அனுப்பி வைத்தனர்.
இனிமேல் அந்த ஊருக்கு அண்ணன் மகாராஜன் வருவாரா? வந்தால் அவர் என்ன செய்ய போகிறார்? என்று கிராம மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்!
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications