பெரியதம்பிக்கு பதில் சின்னத்தம்பி! கவுன்சிலருக்கு போட்டியிடும் ஓபிஎஸ் சகோதரர்! பெரியகுளம் விறு விறு!
தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடைசி தம்பியான சண்முகசுந்தரம் பெரியகுளம் நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
ஓ.பி.எஸ்.ஸின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும் பட்சத்தில் சண்முகசுந்தரமே நகர்மன்ற தலைவராக வரக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும், அவரது மூத்த தம்பியான ஓ.ராஜாவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

ஓ.பி.எஸ்.தம்பிகள்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 4 உடன்பிறந்த தம்பிகள் உள்ளனர். அதில், ஓ.சுசிந்தரனும், ஓ.பாலமுருகனும் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்ட நிலையில் ஓ.ராஜாவும், ஓ.சண்முகசுந்தரமும் மட்டுமே இருக்கிறார்கள். இதில் ஓ.ராஜாவை தவிர ஓ.பி.எஸ்.ஸின் மற்ற தம்பிகளை பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. அவர்கள் விவசாயம், தொழில் என அதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்.

சண்முகசுந்தரம்
இந்நிலையில் புதுவரவாக ஓ.பன்னீர்செல்வத்தின் கடைசி தம்பியான சண்முகசுந்தரம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார். பெரியகுளம் நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இவர், நகர்மன்ற தலைவர் பதவியை குறிவைத்து இப்போதே காய்நகர்த்த தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பெரியகுளம் நகராட்சி தலைவராக ஏற்கனவே ஓ.ராஜா இருந்ததும் சிறந்த நகராட்சிக்கான விருதை ஜெயலலிதாவிடம் அவர் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

திமுக போட்டி
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அதிமுகவை வீழ்த்தி அங்கு திமுகவை சேர்ந்த ஒருவரை நகராட்சி சேர்மனாக்க திமுக மாவட்டச் செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் இரவு பகல் பாராமல் கடும் போட்டி கொடுத்து வருகிறார். அதிமுக வேட்பாளர்கள் விதிமீறல்களில் ஈடுபடுகிறார்களா என்பதை ஆராய தனிக்குழுவே அமைத்து களமிறக்கி விட்டிருக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன்.

ஓ.பி.எஸ்.குடும்பம்
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள நிலையில் அவரது மூத்த மகன் ரவீந்தரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இளையமகன் நேரடியாக அரசியலில் பொறுப்பு பெறாவிட்டாலும் அவரும் தனக்கென ஆதரவாளர்கள் வட்டத்தை உருவாக்கி தேனி மாவட்டத்தில் அரசியல் செய்து வருகிறார். ஓ.பி.எஸ்.ஸின் தம்பியான ஓ.ராஜா ஆவின் சேர்மன், பெரியகுளம் நகராட்சி சேர்மன் என பல பதவிகளை வகித்திருக்கிறார். இந்நிலையில் ஓ.பி.எஸ்.ஸின் கடைசி தம்பியும் கவுன்சிலர் பதவிக்கு கச்சைகட்டி நிற்கிறார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications