பாண்டியன் எக்ஸ்பிரஸ்: இனி சென்னை டூ மதுரை அல்ல.. சென்னை டூ போடி - இது ஓ.பி.ரவீந்திரநாத்தின் கோரிக்கை
தேனி: சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை தேனி மாவட்டம் போடி வரை இயக்க வலியுறுத்துவேன் என அதிமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தேக்கம்பட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுகவை சேர்ந்த தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்தரநாத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நிழற்குடையை திறந்துவைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரை - போடி மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கி தற்போது மதுரையில் இருந்து தேனி வரை பணிகள் முடிவடைந்து உள்ளன. கடந்த மாதம் மதுரை தேனி வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. தற்போது மத்திய அரசு அனுமதிக்காக நிலுவையில் உள்ளது.

ரயில்வேதுறை பொதுமேலாளரிடம் இது குறித்து நான் பேசினேன். இன்னும் ஓரிருநாட்களில் ரயில்வே அமைச்சரை தொடர்புகொண்டு பேசுவேன். விரைவில் நடைபெற உள்ள ரயில் சேவை தொடக்க விழாவில் மதுரை அல்லது தேனியில் ரயில்வே அமைச்சர் கலந்து கொள்ளவேண்டும் என கோரிக்கை வைப்பேன். ஒரு மாத காலத்தில் ரயில்சேவை துவங்கும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நான் ரயில்வே அமைச்சரிடம் 7 கோரிக்கைகளை வைத்திருக்கிறேன். அதில் மதுரை போடி ரயில் சேவை கோரிக்கை முக்கியமானது. மதுரையில் இருந்து போடி வரையிலான ரயில் சேவை மட்டுமல்லாமல் சென்னையில் இருந்து மதுரை வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை இயக்க வேண்டும் என வலியுறுத்துவேன்.
ரயில் சோதனை ஓட்டத்தின் போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து மாநில அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications