தேனி தொகுதியில் ஒரு ஓட்டு வாங்கி அதிமுக .. 11 இடங்களில் ஒற்றை இலக்கம்.. அதிர்ந்த ஆண்டிப்பட்டி
தேனி: தேனி லோக்சபா தொகுதியில் டெபாசிட் இழந்த அதிமுக, 11 வாக்குச்சாவடிகளில் அதிமுக ஒற்றை இலக்க வாக்குகளை கூட தாண்டவில்லை. குறிப்பாக ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு மட்டுமே வாங்கியிருக்கிறது அதிமுக.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதியையும் திமுக காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு 39 இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியால் வெல்ல முடியாமல் போன தொகுதி என்றால் அது தேனி தொகுதி தான். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் மகன் ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் தேனி தொகுதியில் அதிமுகதான் வெற்றி பெற்றிருந்தது.

பொதுவாகவே தேனியை அதிமுகவின் கோட்டை என்று தான் சொல்வார்கள்.. 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக இங்குள்ள அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. 2016ல் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் தொகுதியை தவிர அனைத்து தொகுதியிலும் வென்றிருந்தது.
எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிடித்த ஊராகவும், அவர்கள் போட்டியிட்ட தொகுதிகள் உள்ள மாவட்டமாகவும் தேனி இருந்தது. தேனி மாவட்டத்தில் திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றதே கிடையாது. 1996ல் தான் கடைசியாக திமுக இங்கு எம்பி தேர்தலில் வென்றிருந்தது. அதற்கு முன்பு 1980ல் தான் வெற்றி பெற்றிருந்தது.
இதன் காரணமாகவே திமுக எப்போதுமே தேனி தொகுதியை அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தந்துவிடும். ஆனால் இந்த முறை அப்படி தரவில்லை.. காரணம்.. டிடிவி தினகரன்போட்டியிட போகிறார் என்ற தகவல் தான் அதற்கு காரணம்.. டிடிவி தினகரனை தோற்கடிக்க விரும்பிய திமுக தலைமை, காங்கிரஸ் கட்சிக்கு தராமல் தானே இந்த முறை போட்டியிட்டது. தேனியல் தி.மு.க. வேட்பாளராக தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக வி.டி.நாராயணசாமி போட்டியிட்ட நிலையில், பா.ஜனதா கூட்டணியில் அ.ம.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார்.
இதனால் இந்த 3 வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தேனி தொகுதி முழுவதுமே இருந்தது. பிரச்சாரத்தின் போது டிடிவி தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் இடையே அனல் பறந்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவில், தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அமோக வெற்றி பெற்றார்.
தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 292668 வாக்குகள் வாங்கினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் தங்க தமிழ்செல்வன் 571493 வாக்குகள் பெற்றார். இதனால் டிடிவி தினகரன் 278825 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் நாராயணசாமி டெபாசிட் கூட வாங்காமல் பரிதாபமாக தோற்றுப் போனார். தேனியில் அதிமுக டெபாசிட் கூட வாங்காமல் தோற்தை பார்த்து அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் உசிலம்பட்டி, சோழவந்தான், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் உள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகு அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு இடைத்தேர்தல், 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இந்த தொகுதியை திமுக வென்றது.
எனினும் அதிமுகவிற்கு ஆண்டிபட்டியில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இந்த சூழலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் சில வாக்குச்சாவடிகளில் அதிமுக ஒற்றை இலக்க வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது அதிமுகவினரை கவலையில் ஆழ்த்தி உள்ளது. ஆண்டிபட்டி தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி எண் 309-ல் ஒரு வாக்கு மட்டுமே அதிமுக பெற்றிருந்தது. இதேபோல் வாக்குச்சாவடி எண் 308-ல் 2 வாக்குகளே பெற்றது. வாக்குச்சாவடி எண் 224-ல் 3 வாக்குகள், 184-ல் 9 வாக்குகள், 28-ல் 8 வாக்குகள் மட்டுமே பெற்றது. அதே நேரத்தில் திமுக அமமுக ஆகியவை இங்கு அதிகப்படியான வாக்குகள் வாங்கியிருந்தன.
இதேபோல் பெரியகுளம் தொகுதியில் வாக்குச்சாவடி எண் 13-ல் அதிமுக 7 வாக்குகள் மட்டுமே பெற்றது. அதே வாக்குச்சாவடியில் திமுக 271 வாக்குகளும், . 177 வாக்குகள் பெற்றன. போடியில் வாக்குச்சாவடி எண் 33-ல் அதிமுக 5 வாக்குகளே பெற்றன. அதே வாக்குச்சாவடியில் திமுக 366 வாக்குகள், அமமுக 285 வாக்குகள் பெற்றன. மொத்தமாக தேனி லோக்சபா தொகுதியில் மொத்தம் 11 வாக்குச்சாவடிகளில் அ.தி.மு.க. ஒற்றை இலக்க வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
-
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்?












Click it and Unblock the Notifications