மறுவாக்குப்பதிவு அமமுகவிற்கு சாதகம்.. உற்சாகத்தில் தங்க தமிழ்செல்வன்
Recommended Video
தேனி: மறுவாக்குப்பதிவு அமமுகவிற்கு சாதகமாக இருக்கும் என தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவை தொகுதிக்கு உள்பட்ட ஆண்டிபட்டி தொகுதி பாலசமுத்திரம் வாக்குச்சாவடி மற்றும் பெரியகுளம் தொகுதிக்கு உள்பட்ட வடுகப்பட்டி வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இந்த மறு வாக்குப்பதிவினை முதலில் அமமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் மறுவாக்குப்பதிவு இன்று தீவிரமாக நடந்து வரும் நிலையில் சந்தோஷத்தில் இருக்கிறார் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன்.
இன்று தேனி ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் மறுவாக்குப்பதிவு நடந்து வரும் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களித்து வருவதை தங்கதமிழ்செல்வன் பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், மறுவாக்குப்பதிவு என்பது தேவையற்ற ஒன்று. இருப்பினும் மறுவாக்குப்பதிவு அமமுகவிற்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மறுவாக்குப்பதிவு நடந்தால் பொதுவாக ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவார்கள். இந்நிலையில் தங்கதமிழ்செல்வன் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறார். அவர் ஏற்கனவே போட்டியிட்ட ஆண்டிபட்டி தொகுதி என்பது ஒரு காரணம்.இன்னொரு காரணம் கடந்தமுறை வாக்களிக்காதவர்கள் இந்த முறை தனக்கு வாக்களிப்பதாக நம்புகிறார் தங்க தமிழ்செல்வன். இதனால் உற்சாகத்தில் இருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications