Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொதித்தெழுந்த அருந்ததியர்கள்.. சீமான் உருவபொம்மை எரிப்பு! நாங்க தெலுங்கரா? விரட்டப்படும் நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியில் அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

தேனி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர்களை ஆந்திராவில் இருந்து மலம் அள்ள வந்தவர்கள் என்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து இருக்கும் நிலையில், தேனியில் அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இதற்காக நாம் தமிழர் கட்சியினர் அந்த தேர்தலில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்கள்.

அங்கு சென்று உள்ள நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். இந்த நிலையில் அவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முதலியார்களை புகழ்ந்து பேச்சு

முதலியார்களை புகழ்ந்து பேச்சு

அப்போது ஈரோடு கிழக்கில் பெரும்பான்மையாக வசிக்கும் முதலியார்களை பாராட்டி பேசிய சீமான். "விஜயநகர பேரரசு அமைந்த பிறகு முதலியார்களிடம் உங்கள் மன்னர்களுக்கு செய்ததை போல் எங்களுக்கும் பட்டாடை செய்து தர வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் வேறு ஆளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார்கள். இதனால் சவுராஷ்டிராக்களை வேறு வழியில்லாமல் குஜராத்தில் இருந்து விஜயநகர மன்னர்கள் இறக்கினார்கள்." என்றார்.

ஆந்திராவிலிருந்து வந்தார்களா அருந்ததியர்கள்?

ஆந்திராவிலிருந்து வந்தார்களா அருந்ததியர்கள்?

அதே மேடையில் பேசிய அவர், "இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் கடைசியாக தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு உள்ளார்கள். நீங்கள் எங்கள் ஆட்சியிலும் இதேபோல் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டார்கள். வேற ஆளை பாரு! என்று சொல்லிவிட்டார்கள். எனவே ஆதிக்குடிகளை வேறு வழியில்லாமல் கொண்டு வந்து இறக்கினார்கள். இங்கு இருக்கும் அருந்ததியர்கள்தான் அவர்கள்." என்று கூறினார்.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

அருந்ததியர்கள் குறித்து சீமானின் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சீமான் தங்களை அவமதித்துவிட்டதாக அருந்ததியர் அமைப்புகளும் குற்றம்சாட்டி வருகிறார்கள். நேற்று ஈரோடு ராஜாஜிபுரத்தில் வாக்கு சேகரிக்க நாம் தமிழர் கட்சியிர் சென்றபோது அவர்களை அருந்ததியின மக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

தடுத்த போலீஸ்

தடுத்த போலீஸ்

இதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அங்கு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த டிஎஸ்பி தலைமையிலான போலீசாரிடம் அருந்ததியின மக்கள் சீமானை கைது செய்யக்கோரினர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

 35,000 பேர் இருக்கிறோம்

35,000 பேர் இருக்கிறோம்

இந்த நிலையில் இன்றும் அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சியினரை அவர்கள் தடுத்து நிறுத்தினர். அருந்ததியர்கள் மலம் அள்ளுபவர்கள் என்று சீமான் மேடையில் பேசுகிறார். நீங்கள் ஏன் அருந்ததியர் பகுதிக்கு வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய மக்கள் "ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் அருந்ததியர்கள் என்றார் சீமான். நாங்கள் 35,000 பேர் இங்கு இருக்கிறோம். அனைவரும் கொதிப்படைந்து உள்ளோம்." என்றனர்.

சீமான் மீது புகார்

சீமான் மீது புகார்

சீமான் தலைவர் மன்னிப்பு கேட்காமல் அருந்ததியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு உங்களால் ஓட்டு செல்ல கேட்க முடியாது என்று கூறி அனுமதி மறுத்த மக்கள், நாங்கள் மலம் அள்ள வந்தவர்கள் என்று உங்கள் தலைவர் சொன்னதற்கான ஆதாரத்தை கொண்டு வாருங்கள் என்று கேட்டனர். சீமான் பேச்சால் தங்களுக்கு அவமானமாக உள்ளது எனவும், திட்டமிட்டு 2 வது முறையாக ஒரு சமூகத்தை அவர் இப்படி இழிவுபடுத்துவதாக குற்றம்சாட்டினர்.

 சீமான் உருவ பொம்மை எரிப்பு

சீமான் உருவ பொம்மை எரிப்பு

இதனை தொடர்ந்து ஈரோட்டில் அருந்ததியினர் மக்கள் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே தேனியில் சீமானை கண்டித்து அவரது உருவ பொம்மையை தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+