பாஜகவிற்கு ஷாக் தரப்போவதே உ.பி, பீகார், கர்நாடகாதான்.. இது பெரிய ட்விஸ்ட்.. சொன்னது யாரு பாருங்க
சென்னை: பாஜக எப்போதெல்லாம் வீக்காக இருக்கிறதோ அப்போது எல்லாம் மதத்தை பற்றி பேசுவார்கள். இப்போது தாலி விவகாரம், இஸ்லாமிய விவகாரம், மத விவகாரம் என்றெல்லாம் பேசுவது எதை காட்டுகிறது என்றால்.. பாஜகவின் வலிமையற்ற தனத்தையே காட்டுகிறது. இந்தி ஹார்ட் லேண்டில் பாஜவிற்கு மோசமான நிலைமை உள்ளது, என்று சிபிஎம் கனகராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
2024 லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. தேர்தல் தொடர்பாக பலரும் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

கணிப்பு: 2024 லோக்சபா தேர்தல் தொடர்பாக அரசியல் ஆராய்ச்சியாளர் யோகேந்திர யாதவ் அளித்துள்ள பேட்டியில். தற்போதைய அரசியல் நிலவரப்படி பாஜக 250க்கும் குறைவான இடங்களையே பெறும். பாஜக மெஜாரிட்டி பெற வாய்ப்பு இல்லை. முக்கியமாக தேர்தல் இறுதிக்கட்டத்தின் போது உ.பி. மற்றும் பீகாரில் இருந்து பாஜக எதிர்ப்பு வாக்குகள் அதிகம் ஆகும் பட்சத்தில் பாஜகவிற்கு மட்டுமல்ல என்டிஏவுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். என்டிஏவை விட இந்திய கூட்டணி அதிக இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். இந்தியா கூட்டணி 250 இடங்களை தாண்டி பெற வாய்ப்புகள் உள்ளன.
பாஜக தனித்து மெஜாரிட்டி பெறுவதற்கான வாய்ப்புகள் தற்போது குறைவாகவே உள்ளன. சிலர் சர்வே ரீதியாக பொய்களை சொல்கின்றனர்., என்று அரசியல் ஆராய்ச்சியாளர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
பேட்டி: இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தல் தொடர்பாக சிபிஎம் கனகராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், யோகேந்திர யாதவ் என்ன சொல்கிறார்.. நான் எக்சிட் போல் எடுக்கவில்லை. நான் விசாரித்ததில் சொல்கிறேன்.. இத்தனை இடங்கள் குறையும் என்று சொல்கிறார். ஆனால் பிரஷாந்த் கிஷோர் அதற்கு எதிராக பேசுகிறார். பிரஷாந்த் கிஷோர் பேசுவது அவரின் நேர்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. பாஜகவிற்கு இடங்கள் குறையாது என்று அவர் கூறுகிறார். தமிழ்நாட்டில் பாஜக வெல்லாது. கர்நாடகாவில் பாஜகவை விட காங்கிரஸ் இந்த முறை அதிக இடங்களை வெல்லும்.
முதல் சுற்றில் காங்கிரஸ் 8 இடங்கள் கிடைக்கும். இரண்டாம் சுற்றில் ரேவண்ணா விவகாரம் காரணமாக பாஜகவிற்கு கூடுதல் இடங்கள் செல்லும். அதேபோல் தேஜஸ்வி யாதவ் பீகாரில் சிறப்பாக செயல்படுகிறார். ராகுல் காந்தியுடன் இணைந்து மிக சிறப்பாக செயல்படுகிறார். அங்கே நிதிஷ் குமார் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்யவில்லை.

அப்படி இருக்க பிரஷாந்த் கிஷோர் சொன்னது எப்படி நடக்கும். பாஜக எப்போதெல்லாம் வீக்காக இருக்கிறதோ அப்போது எல்லாம் மதத்தை பற்றி பேசுவார்கள். இப்போது தாலி விவகாரம், இஸ்லாமிய விவகாரம், மத விவகாரம் என்றெல்லாம் பேசுவது எதை காட்டுகிறது என்றால்.. பாஜகவின் வீக்னசைத்தான் காட்டுகிறது. இந்தி ஹார்ட் லேண்டில் பாஜவிற்கு மோசமான நிலைமை உள்ளது. பாஜக உச்சத்தை அடைந்துவிட்டது.
பாஜகவிற்கு இனி குறையும். கூடாது. 272 இடங்களை பாஜக வெல்லாது. கர்நாடகாவில் 15 இடங்கள் குறையும். பீகாரில் கண்டிப்பாக குறையும். உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கண்டிப்பாக கூடுதல் இடங்களை வெல்லும். 30 இடங்களை பாஜக இழக்கும் என்பது உறுதி. இன்னும் சில இடங்களை மேலும் இழக்கும். இதனால் பாஜக மெஜாரிட்டியை இழக்கும். மகாராஷ்டிராவில் நிலைமை பாஜகவிற்கு எதிராக மாறிவிட்டது.
காங்கிரஸ் தனியாக ஆட்சியை பிடிக்க முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு தனியாக ஆட்சி அமைக்கும் சூழல் இருக்காது. இதனால் கூட்டணி ஆட்சி வரலாம். ஆனால் பாஜக உச்சத்தை அடைந்துவிட்டதால் பாஜகவிற்கு இனி குறையும். கூடாது. 272 இடங்களை பாஜக வெல்லாது, என்று சிபிஎம் கனகராஜ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications