தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தங்க.தமிழ்ச்செல்வனை மேடையில் ஏற்றாத ஸ்டாலின்! இது தான் புரோடகால்! பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அரசு புரோடகால் படியே நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.

Recommended Video

    தேனியில் முதல்வர் ஸ்டாலின் | Oneindia Tamil

    தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் தங்க.தமிழ்ச்செல்வன் முதல்வருடன் மேடையில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அந்த வாய்ப்பு தரப்படவில்லை.

    தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ரூ.5 லட்சம் நிவாரணம் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ரூ.5 லட்சம் நிவாரணம்

    அதேவேளையில் தேனி மாவட்ட திமுக எம்.எல்.ஏ.க்களான கம்பம் ராமகிருஷ்ணன், மகராஜன், சரவணக்குமார் ஆகியோர் முதல்வருடன் மேடையில் இருந்தனர்.

    முதல்வர் சுற்றுப்பயணம்

    முதல்வர் சுற்றுப்பயணம்

    தேனி மாவட்டத்தில் அரசின் புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெடுக்கப்படும் பணிகளை ஆய்வு செய்யவும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவருக்கு தேனி மாவட்ட திமுக செயலாளர்கள் கம்பம் ராமகிருஷ்ணனும், தங்க.தமிழ்ச்செல்வனும் கட்சியினரை பெருமளவில் திரட்டி மாவட்ட எல்லையில் நேற்று மாலை வரவேற்பு கொடுத்து அசத்தினர்.

    தங்க.தமிழ்ச்செல்வன்

    தங்க.தமிழ்ச்செல்வன்

    இந்நிலையில் இன்று காலை தேனி ஒன்றியம் ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற 10,427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சருடன் மாவட்டச் செயலாளர் என்ற முறையில் தங்க.தமிழ்ச்செல்வனும் மேடையில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முதல்வர் தரப்பு நோ சொல்லிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அரசு நிகழ்ச்சியில் புரோடகால் முறையை மாற்றவேண்டாம் என்பதில் முதல்வர் தரப்பு உறுதியாக இருந்ததாம்.

    ஓ.பி.எஸ். முகாம்

    ஓ.பி.எஸ். முகாம்

    இதனிடையே தங்க.தமிழ்ச்செல்வனை அரசு விழா மேடையில் முதல்வர் ஏற்றினால் அதை வைத்து ஒரு அரசியல் ஆடு புலி ஆட்டம் ஆடலாம் என கணக்கிட்டிருந்த ஓ.பி.எஸ். முகாமுக்கு இது பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாம். ஆனாலும் அதே வேளையில் தங்க.தமிழ்ச்செல்வன் முதல்வருடன் ஒன்றாக மேடையில் இருக்காதது அவர்களுக்கு ஒரு வகையில் ஹேப்பியை கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தனிப்பட்ட முறையில்

    தனிப்பட்ட முறையில்

    இதனிடையே நேற்றிரவு தனிப்பட்ட முறையில் தங்க.தமிழ்ச்செல்வனிடம் தேனி மாவட்ட திமுக வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து சில ஆலோசனைகளை கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அடுத்ததாக இன்று மாலை திண்டுக்கல் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Cm Stalin Theni events:தேனி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அரசு புரோடகால் படியே நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X