ஒரே ஊர்ல.. மொத்தம் 18 பேர்.. குடும்பத்தோட ஒன்னா தாயம் விளையாடி.. எல்லோருக்கும் கொரோனா!
ஓடைப்பட்டி கிராமத்தில் 18 பேருக்கு ஒரே நாளில் தொற்று ஏற்பட்டுள்ளது
தேனி: ஒரு ஊர்ல 18 பேருக்கும் ஒரே சமயத்தில் தொற்று வந்துள்ளது.. இவர்கள் எல்லாரும் சேர்ந்து ஒன்றாக தாயம் விளையாடி இருக்கிறார்கள்.. இப்போது மொத்தமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இதற்கெல்லாம் காரணம் கோயம்பேடு ஹாட் ஸ்பாட்தான்!!
தேனி மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 13 பேர் தொற்று உறுதியாகி உள்ள நிலையில் அடுத்தடுத்து பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் ஒரே கிராமத்தில் மேலும் 12 பேருக்கு தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ளது ஓடைப்பட்டி என்ற கிராமம்... இங்கு வசித்து வரும் ஒரு லாரி டிரைவர் கோயம்பேட்டுக்கு வந்து போயுள்ளார். கோயம்பேடுக்கு யாரெல்லாம் வந்தார்கள் என்பதை கண்டறிந்து சோதனைகள் நடத்தப்பட்டபோது, இவரும் சிக்கினார்... இதையடுத்து, உடனடியாக டெஸ்ட் எடுக்கப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. இவருக்கு உறுதியாகவும் இவருடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்று அந்த ஆய்வு நடத்தப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 200 பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இவர்களை சோதித்ததில் 12 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 5 பேர் பெண்கள் ஆவர். மேலும் சிலர் கண்காணிப்பில் உள்ளனர்... அதனால் ஓடைப்பட்டி கிராமம் முழுதும் கலக்கம் சூழ்ந்து காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கோயம்பேட்டுக்கு வந்து போன லாரி டிரைவர் சுற்றம், சூழ எல்லோருடனும் உட்கார்ந்து தாயம் விளையாடி இருக்கிறார்.
அதனால்தான் அந்த 12 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஓடைப்பட்டி கிராமமே அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.. அதேபோல, ஓடைப்பட்டி பகுதியில் வெளியூர் நபர்கள் நுழைவதை தடுக்க சாலைகள் தெருக்களில் முள் செடிகளை வெட்டிப்போட்டு கிராமத்தின் அடைத்து வைத்துள்ளனர். விறுவிறு பரிசோதனைகளும் நடந்து வருகின்றன!
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications