Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிணற்றில் தேனி முருகேஸ்வரி.. நொடிப்பொழுதில் காப்பாற்றிய பரத்.. கடைசியில் கனவிலும் நினைக்காத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே குடும்ப தகராறில் மனமுடைந்து கிணற்றில் குதித்த பெண்ணை, காப்பாற்றக் குதித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஆனால் அந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார். நாம் பிறருக்கு உதவி செய்தால் நமக்கு நல்லதே நடக்கும் என்று சொல்ல முடியாது என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக நெட்டிசன்கள் தெரிவித்தனர்.

நல்லது செய்ய போன பலருக்கு எதிர்பாராத துயரங்கள் நடக்கிறது. ஏற்கவே முடியாத அந்ததுயரங்களால் அவரது குடும்பம் மட்டுமின்றி ஊரே கண்ணீர்வடிக்கும்.. அப்படி ஒரு சம்பவம் தான் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடந்துள்ளது. உத்தமபாளையம் அருகே முருகேஸ்வரி என்ற பெண் குடும்ப தகராறில் வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்தார். இதை கவனித்த பக்கத்து வீட்டில் வசிக்கும் பரத் என்பவர், சற்றும் யோசிக்காமல் உடனடியாக அந்த பெண்ணை காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.

Do you know what happened to the young man who saved a woman who jumped into a well in Theni

அப்போது பரத், முருகேஸ்வரியை காப்பாற்றினார். ஆனால் எதிர்பாராத விதமாக அதிக நேரம் நீரில் இருந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். உயிர் பிழைத்த முருகேஸ்வரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரை காப்பாற்றிவிட்டு இறந்த பரத்தின் உடலை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து வந்த காவல்துறையினர், பரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. உயிரை காப்பாற்ற முயன்ற பரத், உயிரை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட சம்பவம் தேனி மாவட்டம் உத்தம பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

தேனி அருகே விபத்து: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த 55 வயதாகும் முதியவர் ராஜேந்திரன். இவருடைய மகன் வீரமுத்து (30). இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வந்தார்கள். வீரமுத்துவுக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் இருக்கிறார்கள். இந்தநிலையில் ஜனவரி 1ம் தேதி அன்று வீரமுத்து, தனது தந்தையுடன் வேலைக்காக பெரியகுளத்துக்கு சென்றார். பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஜி.கல்லுப்பட்டி நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

தேவதானப்பட்டி அருகே திண்டுக்கல்-தேனி சாலையில் உள்ள டி.வாடிப்பட்டி பிரிவு அருகில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வத்தலக்குண்டுவில் இருந்து தேனி நோக்கி சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் அந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வீரமுத்து, ராஜேந்திரன் ஆகியோர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு இறந்து கிடந்த வீரமுத்து, ராஜேந்திரன் ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற சரக்கு வேன் மற்றும் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+