யூட்யூபில் தான் புரட்சி? வரதட்சனை கொடுமை..சிக்கிய டெக் சூப்பர் ஸ்டார் சுதர்சன்? மாமனார் சொன்ன பகீர்
தேனி: பிரபல டெக் யூடியூபர் சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவி வரதட்சணை புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமணத்தின் போது வரதட்சணையாக 30 பவுன் நகை 5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்த நிலையில் மேலும் 20 பவுன் நகை கேட்டு தன்னை தாய் வீட்டிற்கு அனுப்பியதாக புகார் அளித்துள்ளார் மனைவி.
"டெக் சூப்பர் ஸ்டார்" என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் சுதர்சன், புதிதாக வெளியாகும் செல்போனின் சாதகம், பாதக அம்சங்கள் குறித்து வீடியோ வெளியிட்டு யூட்யூபில் பிரபலம் அடைந்தவர் தான் இவர்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதி சேர்ந்த சுதர்ஷன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்த விமலா தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தார்.

தேனி மாவட்டம் தேனி அருகே முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் விமலா தேவி(28) இவர் மருத்துவம் படித்து முடித்து மதுரையில் மருத்துவராக பணிபுரிந்த போது இருவரும் காதலித்த நிலையில், கடந்த 01.03.24 அன்று இரு வீட்டாரின் சம்மதத்துடன் மதுரையில் உள்ள தனியார் மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 30 பவுன் தங்க நகை, 5 லட்சம் ரூபாய் ரொக்கம், இரண்டு லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்களை சுதர்சனின் தந்தை கேட்டதன் பேரில் பெண்ணின் வீட்டிலிருந்து வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து சுதர்சன் தனது மனைவி விமலா தேவியுடன் மதுரையில் குடும்பத்துடன் குடியிருந்து வந்துள்ளனர். திருமணத்தின் போது சுதர்சன் தனியார் யூடியூப் சேனலில் பணியாற்றி வந்ததாகவும் அதன் பின்பு அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி "டெக் சூப்பர் ஸ்டார்" என்று சேனல் ஆரம்பித்து செல்போன் குறித்த ரிவ்யூகளை வீடியோவாக வெளியிட்டு தனியாக சேனல் நடத்தி வருகிறார்.
தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு வரதட்சணையாக கொடுக்கப்பட்ட 30 பவுன் நகை மற்றும் பணத்தை சேர்த்து சொந்தமாக வீடு கட்டி வந்ததாகவும், அதற்கான கடனை அடைக்க முடியாததால் சுதர்சன் குடும்பத்தினர் சிக்கலில் இருந்ததாக தெரிகிறது. இதனால் சுதர்ஷன் விமலா தேவியிடம் நீ மருத்துவராக இருந்து எங்களுக்கு என்ன சம்பாதித்து தந்தாய் என்று கேட்டு விமலா தேவியை ஆபாசமாக பேசி சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே விமலா தேவி கர்ப்பமாக இருந்ததால் அவரை அவரின் தந்தை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். பின் சுதர்சன் குடும்பத்தினரிடம் விமலாதேவியின் தந்தை ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தேனி அருகே வீரபாண்டியில் விமலா தேவி மற்றும் குழந்தையை அழைத்துச் செல்ல சுதர்சனின் குடும்பத்தினரிடம் பெண்ணின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
அப்போது சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் விமலா தேவியின் தந்தையிடம் மேலும் 20 பவுன் நகை கொடுத்தால்தான் தனது மனைவி மற்றும் குழந்தையை அழைத்துச் செல்வதாக கூறியதாக தெரிகிறது. வரதட்சணையாக 30 பவுன் நகை 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்த பிறகும் மேலும் 20 பவுன் நகை கொடுத்தால்தான் சேர்ந்து வாழ முடியும் என சுதர்சனின் குடும்பத்தினர் வரதட்சனை கொடுமை செய்வதாக விமலா தேவி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது கணவர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மீது கடந்த 28 ஆம் தேதி புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வீரபாண்டி காவல் நிலையத்தில் யூடியூபர் சுதர்சன், மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் ஆடியோ வெளியீட்டு தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது யூடியூபில் பிரபலமான டெக் ரிவியூரான சுதர்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை கேட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகார் தொடர்பாக பேசியுள்ள சுதர்சனின் மாமனார்," ஆரம்பத்தில் திருமணத்தின் போது எந்தவித பிரச்சனையும் இல்லை. இந்த நிலையில் சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்த சுதர்சன், எங்கள் மகளை தொல்லை செய்ய ஆரம்பித்தார். இதை அடுத்து பல இடங்களில் கேட்டு சுமார் 5 லட்சம் ரூபாயை கொடுத்தேன். ஆனால் அதற்குப் பிறகும் பணம் கேட்டு சுதர்சன் தொல்லை செய்து வந்ததோடு எனது மகளை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை செய்தார். ஒரு கட்டத்தில் அத்துமீறல் அதிகமானதால் வேறு வழியின்றி தற்போது புகார் அளித்துள்ளேன்" எனக் கூறியிருக்கிறார்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications