கேட் போட்ட கேரளா.. வெகுண்டெழுந்த விவசாயிகள்! கடைசி நேரத்தில் கட்டான மீட்டிங்.. ஆனாலும் இது முக்கியம்
தேனி: தமிழக விவசாயிகளின் போராட்டத்தை கண்டு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நேற்று நடைபெற இருந்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள் மத்திய மாநில அரசுகளுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட திட்டமிட்ட கேரள அரசை கண்டித்து, பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் 58ம் கால்வாய் விவசாயிகள் சங்கங்கள் உள்பட சில சங்கங்கள் சார்பில் தேனி மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்ப் பென்னிகுயிக் மணிமண்டபம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு அணை உள்ளது. அணை நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2 லட்சத்து 17,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
முல்லை பெரியாறு அணை: 152 அடி உயரம் கொண்ட அணையை கேரளா, 1979ல் பலவீனமடைந்துவிட்டது எனக் கூறி நீர்மட்டத்தை, 136 அடியாக நிலை நிறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு, விவசாயிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை தொடர்ந்து 2014ல் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் அணையை ஒட்டியுள்ள பேபி அணையை பலப்படுத்திய பின் 152 அடியாக்கி கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கேரளா அரசு: ஆனால் பேபி அணையை பலப்படுத்துவதற்கு கேரள அரசு பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதனால், நீர்மட்டத்தை 142 அடியிலிருந்து, 152 அடியாக உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து ஒவ்வெரு முறையும் அணை 142 அடியாக உயரும்போதும், புதிய அணை என்ற கோரிக்கையை முன் வைத்து கேரளா பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் அணைக்கு 360 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்டுவதற்கும், புதிய அணை கட்டிய பின் முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்கும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு கேரளா மனுதாக்கல் செய்து மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் போராட்டம்: அதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்ட களத்தில் இறங்கின. பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் தலைமையில் நேற்று கேரள அரசைக் கண்டித்து லோயர் கேம்ப் பஸ் ஸ்டாண்டில் இருந்து குமுளி நோக்கி முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். மலைப்பாதையில் உள்ள பென்னிகுயிக் மணிமண்டபம் அருகே இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கேரள அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை: இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், 58ம் கால்வாய் விவசாய சங்கம் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, பாரதிய கிசான் சங்கம், முல்லை சாரல் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். கேரளா புதிய அணை கட்டுவதாக கூறப்படும் இடம் பெரியாறு புலிகள் காப்பகத்திற்குள் இருப்பதால் தேசிய புலிகள் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் சுற்றுச்சூழல் அமைச்சகம் கேரளாவின் மனுவை பரிசீலிக்க கூடாது. அணை தொடர்பாக கேரளாவில் இருக்கும் தனி நபர்களோ, கேரள மாநில அரசோ போடக்கூடிய எந்த வழக்கையும் உச்சநீதிமன்றம் இனி வரும் காலங்களில் அனுமதிக்க கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இனியும் கூடாது: இந்த நிலையில் தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ஒப்பந்தத்தின்படி முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று நடக்க இருந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. நேற்று லோயர் கேம்பில் மிக பிரமாண்டமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டு கேரள அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக பத்திரிக்கையாளர்கள் மற்றும் மீடியாக்களுடன் கேரளா பத்திரிக்கையாளர்களும், மீடியாக்களும் வந்து நேரடியாகவும் ஒலிபரப்பு செய்தனர். அதைக்கண்டு தான் மத்திய அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டத்தையே ஒத்தி வைத்து இருக்கிறது என்கின்றனர் விவசாயிகள். அதேபோல் இனியும் கூட்டத்தை நடத்தாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications