தூக்கிட்டு வந்து அடிப்பீங்களா.. என்னங்க ஒரு பேட்டை ரவுடி போல் ஸ்டாலின் பேசுகிறார்?.. எச் ராஜா

Subscribe to Oneindia Tamil

தேனி: தமிழக அரசிற்கு விருது வழங்கியவனை தூக்கி வந்து அடிக்க வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு பேட்டை ரவுடியை போல செயல்படுகிறார் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தேனியில் பேட்டி அளித்தார்.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை ஆதரித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தேனி மாவட்டத்தில் இன்று பிரச்சார பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார்.

இதற்காக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த அவர், முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக போராடுவதற்கு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி முதல்வர் அங்கு பயிலும் மாணவர்களை தவறாக வழிநடத்துகிறார்.

பிரதிநிதிகள்

பிரதிநிதிகள்

எனவே அக்கல்லூரிக்கு அரசு வழங்கும் நிதி உதவியை ரத்து செய்ய வேண்டும். மேலும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக குண்டர்களால் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இதன் மூலம் தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறையினருக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர்

எனவே தமிழக அரசு இதுபோன்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டங்களை தடை செய்ய வேண்டும். சிறந்த நிர்வாகத்திற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டதற்கு, விருது வழங்கியவனை தூக்கி வந்து அடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ் பற்றாளர்கள்

தமிழ் பற்றாளர்கள்

ஒரு பேட்டை ரவுடியை போல திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுவது துரதிஷ்டவசமானது. மேலும் தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு நடத்துவதற்கு எதிராக வரும் ஒன்றாம் தேதி போராட்டம் நடத்துபவர்கள் எல்லாம் நாத்திகர், நக்சல்கள், ஜிகாதிகள் போன்றவர்கள். இவர்களெல்லாம் தமிழ் பற்றாளர்கள் இல்லை.

குடமுழுக்கு

குடமுழுக்கு

ஈவெராவே ஒரு தமிழின துரோகி. தமிழைக் காட்டுமிராண்டி என்றும் தமிழ் மொழியைப் படித்தால் பிச்சைக்காரனாக கூட ஆக முடியாது. வீட்டில் மனைவியிடம், வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்று கூறிய ஈவெராவை தந்தை பெரியார் என கூறியவர்கள் தமிழின் துரோகிகள். தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு எதிராக போராடுபவர்கள் எல்லாம் இந்து விரோதிகள் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+