அங்கீகரிக்கப்படாத வீட்டு மனை வாங்குனீங்களா.. இறுதி வாய்ப்பு.. தமிழக அரசு மேஜர் உத்தரவு
தேனி: 2016-ம் ஆண்டுக்கு முன்பு விற்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த இறுதி வாய்ப்பு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டிருக்கிறது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: “தேனி மாவட்டத்தில் மலையிடப் பகுதியில் கடந்த 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் 30-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayouthillareareg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இதுவரை மலையிடப் பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள இது இறுதி வாய்ப்பாக அமைவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனை பிரிவுகளை வரன் முறைப்படுத்த அரசு காலஅவகாசம் வழங்கி வரும் நிலையில் நவம்பர் 30ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது-
எனினும் இது தொடர்பாக 2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி, அனுமதியற்ற மனை (ம) மனைப்பிரிவுகளை முறைப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் (Restrictions for regularization of unapproved plots and layouts) என்னென்ன தெரியுமா என்னென்ன மனைகளில் உள்ளவர்கள் வரன்முறைபடுத்தவே முடியாது தெரியுமா? கீழ்கண்ட வீட்டு மனை உள்ளவர்கள் விண்ணப்பித்தால் மனு நிராகரிக்கப்படும்.
i. நீர்நிலைகள் மீது (வாய்க்கால், தொட்டி, ஏரி, குளம், ஆறு) ஆகியவற்றின் மீது அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகள்
ii. அரசு புறம்போக்கு நிலத்தின் மீது அமையப்பட்டுள்ள மனைப்பிரிவுகள்
iii. திறந்த வெளி ஒதுக்கீடு இடங்கள் (Open space reservation(OSR), பூங்கா, விளையாடுமிடங்கள் அமையப்பெற்ற மனைப்பிரிவுகள், அனுமதி பெறப்பட்ட மனைப்பிரிவில் திறந்த வெளி ஒதுக்கீடு இடங்கள், பூங்கா, விளையாடுமிடங்கள் ஒதுக்கீடுகளில் பிரிக்கப்பட்ட மனைகள்
iv. அடுத்த நிலத்திற்கு வழியாக அமையும் காலிமனை (Vacant Plot)
v. உத்தேச சாலை மீது அமையப்பெற்ற மனைகள். rail corridors (ம) தெருக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அமையும் மனைகள்
vi. பொதுப்பாதை (ம) தெருக்களை ஆக்கிரமிப்பு செய்து பிரிக்கப்பட்ட மனைகள் நில உச்ச வரம்பு சட்டம் 1978 பிரிவு 24-ன் படி உள்ள மனையிடம்
vii. அதிக உயர் அழுத்தம் மின் பாதைக்கு கீழ் பிரிக்கப்பட்ட மனைகள்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications