விசைத்தறியாளர்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்.. 50 சதவீதம் மானியம் வழங்கும் தமிழக அரசு.. எப்படி பெறலாம்
தேனி: பழைய விசைத்தறிகளை மாற்றுவதற்கு 50 சதவீத மூலதன மானியம் தருகிறது தமிழக அரசு. அதனை எப்படி பெறலாம் என்பதை இந்த பதிவில் பார்க்காம். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் கூறியுள்ளார். வழக்கமான விசைத்தறிகளை, தரம் உயர்த்துவதற்காக 50 சதவீதம் மூலதன மானியம் அல்லது ரூ.1 லட்சம் வரையிலும் விசைத்தறி உரிமையாளர்கள் பெற முடியும்.
தமிழக அரசின் விசைத்தறி நவீனமயமாக்கல் திட்டம்: தமிழக அரசு, பழைய விசைத்தறிகளை நவீன தானியங்கி விசைத்தறிகளாக மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது. புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு ஆகும் மொத்த செலவில் 50% மானியமாக வழங்கப்படுகிறது. தனிநபர் நெசவாளர்கள், விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சிறு குழுக்கள் இதனை பெற முடியும். துணி உற்பத்தியின் தரத்தை உயர்த்துவது மற்றும் சர்வதேச சந்தைக்கு இணையாக உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் இந்ததிட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது.

விசைத்தறியாளர்களுக்கு மத்திய அரசின் 'சோலார் எனர்ஜி' திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. விசைத்தறிகளுக்கு ஆகும் மின்சாரச் செலவைக் குறைக்க, சோலார் பேனல்கள் அமைப்பதற்கும் அரசு மானியம் வழங்குகிறது. பட்டியல் இனத்தவர் (SC/ST) மற்றும் சிறுபான்மையினருக்கு அதிகபட்சமாக 50% வரை மானியம் வழங்கப்படுகிறது.
தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுகையில், விசைத்தறி துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு 3 ஆண்டுகள் பழமையான சாதாரண விசைத்தறிகளை நாடாயில்லா ரேபியர் தறிகளாக தரம் உயர்த்த விசைத்தறிகள் நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ் மூலதன மானியங்கள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின்படி, வழக்கமான விசைத்தறிகளை, தரம் உயர்த்துவதற்காக 50 சதவீதம் மூலதன மானியம் அல்லது ரூ.1 லட்சம் (ஒரு தறிக்கு) இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 10 தறிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
இணையதளத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம்
இந்த திட்டத்தின் கீழ் மானிய விலையில் தறிகளை நவீனமாக்கிட, புதிய தறிகளை கொள்முதல் செய்ய அல்லது பொது சேவை மையம் நிறுவ விருப்பமுள்ளவர்கள் tnhandlooms.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications