மாதம் ரூ.20000 கிடைக்கும்.. தவறவிடக்கூடாத அருமையான வாய்ப்பு.. தமிழக அரசின் சூப்பர் திட்டம்!
தேனி: 12-ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியை வெற்றிரகமாக முடித்தால் ஆரம்ப காலமாக மாத ஊதியம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கல்வி கடன் திட்டம் வழங்கப்படுகிறது. இதேபோல் பழங்குடியினருக்கு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மானியமும் தரப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் இலவச பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தாட்கோ நிறுவனம் டாடா, ஹெச்சிஎல் உள்ளிட்ட பல்வேறு ஐடி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி அளித்து வேலையும் தருகிறது. எனவே தாட்கோவில் உள்ள வாய்ப்புகள் குறித்த அறிவிப்பினை முறையாக பார்த்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.

12-ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 12-ம் வகுப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும்பட்சத்தில் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். திறமைக்கேற்றவாறு பதவி உயர்வு அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்."இவ்வாறு அந்த அறிவிப்பில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கூறியுள்ளார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications