"பலான" பிரச்சினையில் சிக்கி மீண்டு உற்சாகமான கதிர்காமு.. பிரச்சார கூட்டத்தில் குவிந்த பெண்கள்!
Recommended Video

தேனி: பொம்பள சமாச்சாரம்தான்.. பாலியல் புகாரில் சிக்கினவர் என்று சொன்னார்களே தவிர.. கதிர்காமு பிரச்சார கூட்டத்தில் ஏகப்பட்ட பெண்கள் குவிந்து வருகிறார்கள்!
தட்டு தடுமாறி இருக்கிற கேஸ்களை எல்லாம் ஒருவழியாக சமாளித்து தேர்தலில் தனித்து போட்டி என்றார் டிடிவி தினகரன். பிறகு சின்னம் பிரச்சனை சுப்ரீம் கோர்ட் வரை போயும் வேலைக்காகவில்லை.
அதனால் கிடைத்த சின்னத்தை வைத்து பிரச்சாரத்தில் இறங்கிய நேரம்தான் பெரிகுளம் அமமுக தலையில் இடி போல் வந்து விழுந்தது கதிர்காமு பாலியல் மேட்டர்!

வீடியோ
இதில் யார் மீது தவறு உள்ளது என்றெல்லாம் தெரியவில்லை, ஆனால் இந்த விவகாரத்தில் கதிர்காமு கிரேட் எஸ்கேப் என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு நாள் சம்பாதித்த பெயரை ஒரே ஒரு வீடியோ வைத்து நாறடிக்கும் வேலை ஆரம்பமானது!

நடிகர் ரஞ்சித்
இருந்தாலும் அமமுக தரப்பு சுதாரித்து கொண்டது. இழந்த பெயரையும், செல்வாக்கையும் சரிகட்ட ஒரு கவர்ச்சி விளம்பரமும் தேவைப்படும் நிர்ப்பந்தம் பெரியகுளம் அமமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தானோ என்னவோ, பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் கதிர்காமுவுக்காக பிரச்சாரம் செய்ய வந்தார்.

முன்ஜாமீன்
ரஞ்சித்தை காண முட்டி மோதும் கூட்டம் ஒரு பக்கம் என்றாலும், பாமகவை உண்டு இல்லை என்று தனது பேச்சில் விமர்சித்தார் ரஞ்சித்! பெரியகுளம் அமமுக தொண்டர்களோ இதன்மூலம் மேலும் உற்சாகமானார்கள். இந்த சமயத்தில்தான், முன்ஜாமீன் பெற்றுக் கொண்ட கதிர்காமு வீரியத்துடன் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.

தன்னிலை விளக்கம்
சும்மா சொல்லக்கூடாது.. பெண் புகாரில் சிக்கியவர் என்று சொல்கிறார்களே தவிர.. ஏகப்பட்ட பெண்கள் கூட்டம்தான் கதிர்காமு பிரச்சாரத்தில் காண முடிகிறது. அனைவரிடமும் தன்னிலை விளக்கம் தர வேண்டிய நிலைமையிலும் கதிர்காமு உள்ளதால், "வீண்பழி, அரசியல் சூழ்ச்சி, பழிவாங்கும் நடவடிக்கை" என்று பேசி வருகிறார்.

பரிசுபெட்டி
கடைசியில் இதன் பலன் என்ன தெரியுமா? 300-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கதிர்காமு முன்னிலையில் அமமுகவில் இணைந்துவிட்டனர்! இப்போது நிலைமையை கேட்கணுமா என்ன... எங்கே போனாலும் கையில் பரிசு பெட்டியுடன் நடையை கட்டி கொண்டு பிரச்சாரத்தில் படு பிஸியாகிவிட்டார் டாக்டர் கதிர்காமு!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications