ஏழைகளுக்கு பிரியாணி கொடுத்த கேபிஒய் பாலா! திடீரென வந்த அரசியல்வாதி! வந்து விழுந்த கேள்வி

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனியில் ஏழைகளுக்கு கேபிஒய் பாலா பிரியாணி கொடுத்த போது அங்கு பிரபல அரசியல்வாதி ஒருவரும் வந்து அந்த அன்னதான விழாவில் கலந்து கொண்டு பாலாவை பாராட்டினார்.

கலக்க போவது யாரு எனும் நிகழ்ச்சியில் பாலா என்பவர் காமெடி செய்து வந்தார். அவர் சம்பாதிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு உதவிகளை செய்து வருகிறார். கடந்த சென்னை வெள்ளத்தின் போது 100 பேருக்கு தலா ரூ 1000 வழங்கினார்.

KPY Bala to join in politics

மருத்துவ வசதி இல்லாத மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். அவர் சம்பாதிக்கும் பணம் சொற்ப அளவில் இருக்கும் போதிலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தை கொண்டிருக்கிறார்.

அமுதவாணன், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோரும் உதவி செய்து வருகிறார்கள். அது போல் விஜயகாந்தின் அன்னதானம் கான்செப்டில் ஈர்க்கப்பட்ட கேபிஒய் பாலா, அவருடைய சமாதியில் இனி அன்னதானத்திற்கு தனது பங்களிப்பும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தேனியில் ஏழை மக்களுக்கு பிரியாணி வழங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு தேனி தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் வந்திருந்தார்.

இதுகுறித்து தேனியில் செய்தியாளர்களை சந்தித்த கேபிஒய் பாலா கூறுகையில், எனக்கு சிறு வயதில் இருந்தே பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வருகிறது. அது போல் எனக்கு கிடைக்காதது பிறருக்காவது கிடைக்கட்டும் என்பதால் நான் உதவி செய்து வருகிறேன்.

மாற்றம் எனும் அறக்கட்டளை விரிவடையும். அதையும் தாண்டி மக்கள் மனம் நிறைவடையும். எனக்கு கொலை மிரட்டலா.. அய்யோ ஏண்ணே அப்படியெல்லாம் சொல்றீங்க! எந்த அரசியல் கட்சியிலிருந்தும் எனக்கு கொலை மிரட்டல் எல்லாம் இல்லை. நான் தனியாகவே உதவிகளை செய்து வருகிறேன்.

இப்போது லாரன்ஸுடன் சேர்ந்து செய்கிறேன். தனியாகவும் செய்வேன், லாரன்ஸுடன் அமைத்த மாற்றம் என்ற அறக்கட்டளை மூலமும் செய்து வருகிறேன். என்னால் முடியாததை தன்னிடம் சொல்லுமாறு லாரன்ஸ் என்னிடம் கூறினார். எனவே இருவரும் சேர்ந்தும் கூட செய்து வருகிறோம்.

என்னையும் ஒரு ஆளாக நினைத்து மனுக்களை எல்லாம் மக்கள் கொடுத்து வருகிறார்கள். அதற்காகவே ஓடி ஓடி சம்பாதிக்க வேண்டும் என நினைக்கத் தோன்றுகிறது. அய்யய்யோ நான் அரசியலுக்கு எல்லாம் வரும் திட்டத்தில் இல்லை. நான் ஏதோ உதவி செய்து வருகிறேன். இவ்வாறு கேபிஒய் பாலா தெரிவித்துள்ளார்.

அது போல் நடிகர் லாரன்ஸ் மாற்றம் என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் எஸ்.ஜே சூர்யா, கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷாவும் இணைந்துள்ளனர். அண்மையில் ஒரு வாட்ச்மேன் தாத்தாவுக்கு கேபிஒய் பாலா, லாரன்ஸுடன் இணைந்து வீட்டை கட்டியுள்ளார். அது போல் விவசாயிகள் சிலருக்கு டிராக்டர் வாங்க லாரன்ஸ் உதவியுள்ளார். அது போல் 150 நாய்களை பராமரித்து வரும் பெண்ணுக்கு கேபிஒய் பாலா உதவியுள்ளார். 150 குழந்தைகளை தத்தெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+