"அந்த" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்

: மதுரை சுகந்திக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டிக் டாக் வீடியோவில் சண்டை... பெண்ணை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமத்தினர்

    தேனி: "அந்த" மாதிரியான பாடல்கள்தான் சுகந்திக்கு பிடிக்கும்.. வெறும் முக்கல், முனகல் பாடல்களுக்கு லிப் மூவ்மென்ட், டான்ஸ் என டிக்டாக் வீடியோவை போட்டதுடன், திடீரென ஆபாசமாகவும் அடிக்கடி தோன்றுவார்.. கடைசியில் சொந்த ஊர் பெயரை நாறடித்துவிட்டதால், சுகந்தியை ஊருக்குள் வரக்கூடாது என்று பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர்!

    தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்துள்ளது நாகலாபுரம் கிராமம்.. இங்கு வசித்து வருபவர்தான் சுகந்தி.. மதுரை சுகந்தி என்றால் டிக்டாக்கில் ரொம்பவும் ஃபேமஸ்!

    கல்யாணமானவர்.. கணவர் ராணுவத்தில் வேலை பார்ப்பதாக சொல்கிறார்கள்.. இதனால் பொழுதை கழிக்க டிக்டாக்கில் நுழைந்தவர் சுகந்தி.. ஆனால் "அந்த" மாதிரி பாடல்களைதான் தேர்வு செய்து வீடியோ போடுவார் இவர்.. பெரும்பாலும் எல்லாமே முக்கல், முனகல் பாடல்கள்தான்! திடீரென ஆபாசமான உடையுடனும் தோன்றுவார் சுகந்தி!

    காதலர்

    காதலர்

    இதனால் ஏராளமான ஆண்கள் சுகந்தியின் வீடியோவுக்கு ரசிகர்கள் ஆனார்கள்.. இதில் சிலர் சுகந்தி செல்போனை நம்பரை வாங்கி பேசவும் தொடங்கினர்.. அடுத்து வீட்டுக்கும் வர ஆரம்பித்தனர்.. பழகும் ஆண் நண்பர்களுடன் இஷ்டத்துக்கும் ஆட்டம் போட்டு வந்திருக்கிறார் போலும்.. இதைதவிர, சுகந்திக்கு காதலர் ஒருவர் தனியாக இருக்கிறார்.

    அசரவில்லை

    அசரவில்லை

    இதெல்லாம் வெளிச்சத்துக்கு வந்தபோது, டிக்டாக்கில் சுகந்தி வீடியோவுக்கு கீழே ஏகப்பட்ட திட்டுகள், வசவுகள் விழுந்துள்ளன.. சிலர் அசிங்க அசிங்கமாக சுகந்தியை கேள்வி கேட்டும் உள்ளனர். ஆனாலும் சுகந்தி அசரவில்லை.. இதனால் 2 பெண்கள், சுகந்திக்கும் அவரது காதலனுக்கும் எதிராக ஸ்டேஷனிலும் புகார் தந்துள்ளனர்.. அப்போதும் சுகந்தி மிரளவில்லை!

    ஆவேசம்

    ஆவேசம்

    இந்நிலையில், டிக்டாக்கில் சுகந்திக்கும் இளைஞர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அவரும் டிக்டாக் வீடியோ பதிவிடுபவர்தான்.. இந்த பிரச்சனையில், சுகந்தியை விமர்சித்த அந்த இளைஞர், சுகந்தியின் கிராமமான நாகலாபுரம் கிராமத்தையும், அங்குள்ள பெண்களையும் சேர்த்து விமர்சித்துவிட்டார். இந்த வீடியோவை பார்த்த நாகலாபுரம் கிராம மக்கள் பொங்கிவிட்டனர்.

    சகோதரி

    சகோதரி

    ஏற்கனவே சுகந்தி மீது கடுப்பில் இருந்தவர்கள், இப்போது சுகந்தியால் சொந்த கிராமத்துக்கு இப்படி ஒரு அவமானமா என்று ஆத்திரத்தின் உச்சிக்கு போய்விட்டனர்.. அதனால் அவரை ஊரை விட்டே துரத்தியடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்... சுகந்திக்கு ஒரு சகோதரி இருக்கிறாராம்.. அவரையும் ஊருக்குள் வரக்கூடாது என்று சொல்லி பழனிச்செட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனையே பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    சைபர் கிரைம் போலீஸ்

    சைபர் கிரைம் போலீஸ்

    "எங்க கிராமத்தையும், எங்களையும் தப்பாக பேசி வெளிவந்த அந்த டிக்டாக் வீடியோவை எப்படியாவது தடை செய்யுங்க" என்று நாகலாபுரம் கிராம மக்கள் போலீசில் சொல்லவும், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி தரப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன அக்கப்போர்கள் இந்த டிக்டாக் வீடியோவால் வரபோகிறதோ தெரியவில்லை!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+