மதுரை டூ மூணாறு.. ஆண்டிபட்டி, தேனியில் புதிய பைபாஸ் சாலை.. போடி மெட்டில் சூப்பர் பிளான்
தேனி: கொச்சி-மதுரை-ராமேஸ்வரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள ஆண்டிப்பட்டி, தேனி, போடி வழியாக புதிய பைபாஸ் சாலை அமைக்கப்பட இருக்கிறது. அதேபோல் போடி மெட்டு முதல் ஆண்டிப்பட்டி கணவாய் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வாகன போக்குவரத்தை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி தீவில் இருந்து மதுரை, ஆண்டிப்பட்டி, தேனி, போடி, மூணாறு, எர்ணாகுளம் வழியாக கொச்சிக்கு தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள மிக நீளமான சாலைகளில் ஒன்றான தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையை பொறுத்தவரை, தனுஷ்கோடி முதல் மதுரை வரை நான்கு வழிச்சாலை உள்ளது.

மதுரையில் இருந்து உசிலம்பட்டி இடையேயும் சில பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கொச்சியில் இருந்தும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மூணாறில் இருந்து கொச்சி வரை சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இதையடுத்து தமிழகத்தில் போடிமெட்டு முதல் ஆண்டிப்பட்டி கணவாய் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு வருகிறது. இதில் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள போடி, தேனி, ஆண்டிப்பட்டி நகரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது இயல்பு. இதன்காரணமாக வாகனங்கள் தாமதமாக செல்வது வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து போடி, தேனி, ஆண்டிப்பட்டியில் புதிய பைபாஸ் சாலை அமைக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போடி, தேனி, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட நகரங்களுக்குள் செல்லாத வகையில் புறவழியில் பைபாஸ் சாலை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதன் அறிக்கை விரைவில் மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளோம். பின்னர் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பிற பணிகள் தொடங்கும்" இவ்வாறு கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications