போடியில் முருகன் திருக்கல்யாண தேங்காயை ரூ 2.55 லட்சத்திற்கு ஏலம் எடுத்த பெண்! அப்படி என்ன விசேஷம்?

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம், போடி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் நேற்று நடைபெற்ற திருக்கல்யாணத்திற்கான திருமாங்கல்யம் சுற்றப்பட்ட தேங்காய் ஒன்று இரண்டு லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு பக்தர் ஒருவரால் ஏலம் எடுக்கப்பட்டது.

போடிநாயக்கனூரில் சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 10 ஆம் தேதி முதல் வெகு விமர்சையாக நடைபெற்று வந்தது.

bodi murugan temple

சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு நேற்று முன் தினம் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து நேற்றைய தினம் முக்கிய நிகழ்வான முருகன்- வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்வு கோயில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முருகப்பெருமானுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு வண்ணமலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வள்ளி தெய்வானை வண்ண பட்டு உடுத்தி மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர்

தொடர்ந்து முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண நிகழ்வுகளை கண்டு பக்தி பரவசத்துடன் கண்டு வழிபட்டனர்.

பின்னர் திருக்கல்யாண மாங்கல்யம் சுற்றப்பட்ட தேங்காய் ஒன்று ஏலத்துக்கு விடப்பட்டது. 11,000 ரூபாயில் துவங்கிய ஏலம் பக்தர்கள் விறுவிறுப்பாக கேட்க துவங்கினர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஏலத்தில் மதுரையைச் சேர்ந்த ரேணுகா, ரூபாய் இரண்டு லட்சத்து 55,000 திற்கு (2,55,000) தேங்காயை ஏலத்தில் எடுத்தனர்.

ஏலத்தில் எடுத்த குடும்பத்தாருக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டு தேங்காய் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு லட்சத்து ஐம்பத்தி ஐயாயிரம் ரூபாய்க்கு ஒரு தேங்காய் ஏலம் எடுக்கப்பட்ட நிகழ்வு பக்தர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அபிஷேகத்திற்கு வரும் தேங்காய் ஏலம் விடுவது வழக்கம். இந்த ஆண்டு ஏலத்தில போடியை சேர்ந்த குணசேகரன் என்பவருக்கும் மதுரை அருகே செல்லம்பட்டியை சேர்ந்த ரேணுகா என்பவருக்கும் கடும் போட்டி நிலவியது. குணசேகரன் ரூ 2.45 லட்சம் வரை ஏலம் கேட்டார். ரேணுகா கூடுதலாக 10 ஆயிரம் சேர்த்து ரூ 2.55 லட்சம் ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டு ஒரு தேங்காய் ரூ 2 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

இந்த புனித தேங்காயை வாங்கி வீட்டில் வைத்து பூஜித்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருப்போருக்கு விரைவில் திருமணம் கைக்கூடும். அது போல் குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த தேங்காயை வைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எலுமிச்சை பழம் ஏலம்

அதே போல் விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் காணப்படும் இரட்டை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. இங்கு பங்குனி உத்திரத்தின் போது பூஜையில் வைத்து வழிபடும் 9 எலுமிச்சைப் பழங்களும் ஏலம் விடுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ஏலத்தில் முதல் பழம் ரூ 45 ஆயிரத்திற்கு ஏலம் போனது. மற்ற 8 பழங்களும் ரூ 15 ஆயிரம், ரூ 16 ஆயிரம் என 9 பழங்களும் சேர்த்து ரூ 1.43 லட்சத்திற்கு ஏலம் போனது. தேங்காயை போல எலுமிச்சை பழத்தால் திருமணம் கைக்கூடும், குடும்ப பிரச்சனை நீங்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+