'யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா'.. காலா பாணியில் களம் இறங்கும் மேகமலை வருநாடு மக்கள்

Subscribe to Oneindia Tamil

தேனி: உச்சநீதிமன்ற தீர்ப்பில் தங்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி வருசநாடு, மேகமலை மலை கிராம மக்கள் ஒன்றிணைந்து உணவு சமைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் வருவது போல் உணவு சமைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வரும் 29ம் தேதி வர உள்ள நிலையில், போராட்டத்திற்கு அனுமதி கேட்டு தேனி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மலை கிராம விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்த காலா படத்தில் ஒரு பாடல் வரும். அதாவது "யார் வச்சது யார் வச்சது உன் சட்டமடா... இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா... நிலமே எங்க உரிமை... நிலமே எங்க உரிமை... உரிமை உரிமை" என்று பாடல் வரிகள் இருக்கும். அந்த பாடலில் தாங்கள் வாழ்ந்த நிலத்தை காப்பாற்றுவதற்காக உணவு சமைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.. அப்படியான ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வருசநாடு மேகமலை சார்ந்த 98 கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

Megamalai Varusanadu Villagers Prepare Kaala-Style Battle to Reclaim Land Rights

ஏன் இப்படி ஒரு முடிவு

தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழும் மலை கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வனத்துறையினர் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைவாழ் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையானது செப்டபம்பர் 29ஆம் தேதி வருகிற நிலையில் அதில் தங்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிற 26 ஆம் தேதி முதல் கடமலைக்குண்டு புதிய பேருந்து நிலையம் பகுதியில் மலை கிராம மக்கள் ஒன்றிணைந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Megamalai Varusanadu Villagers Prepare Kaala-Style Battle to Reclaim Land Rights

இதற்காக "பரம்பரை உரிமை பாதுகாப்பு சங்கம்" சார்பில் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தங்களுக்கான உரிமையை மீட்டுத் தரக்கோரி தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி 26 ஆம் தேதி முதல் மலை கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உணவு சமைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்

தங்களின் போராட்டத்திற்கு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகளை செய்த பின்பு அனுமதி வழங்குவது குறித்து பரிசபரிசளிக்கப்படுவதாக தேனி மாவட்ட எஸ்.பி கூறியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்ட விவகாரத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்த பாகுபாடும் இல்லை.. எல்லா கட்சிகளுமே வருநாடு மேகமலை மக்களுக்கு ஆதரவாகவே உள்ளன. ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த விவாகரத்தில் அடுத்து என்ன செய்ய போகிறது.. அவர்களுக்கு மத்திய மாநில அரசுள் தரப்போகும் நீதி என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு தான் தேனி மாவட்டத்தில் உச்சகட்ட பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+