எங்கள் மலை.. எங்கள் நிலம்! வெடித்துக் கிளம்பிய மேகமலை மக்கள்! பூட்டப்பட்ட கலெக்டர் ஆபீஸ் கதவுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருசநாடு மேகமலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்து மலை கிராம மக்கள் தொடர் காத்திருக்கும் போராட்டம் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவாயில் கேட்டுகள் பூட்டப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடமலை, மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, மேகமலைஉள்ளிட்ட 98 மலை கிராமங்கள் உள்ளன.

இந்த பகுதியில் கிட்டத்தட்ட 75 ஆயிரம் மக்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். ஆடு, மாடு மேய்ப்பது இவர்களின் பிரதான தொழில். அது மட்டும் அல்லாமல் முந்திரி, இலவம்பஞ்சு உள்ளிட்ட ஆண்டுக்கு ஒரு முறை பலன் தரும் விவசாயங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Meghamalai Varusanadu Theni District Meghamalai Tiger Reserve

புலிகள் காப்பகம்

இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு இந்த பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சுமார் 5000 ஹெக்டர் பரப்பளவில் வசித்து வரும் மக்களை வெளியேற்ற வேண்டும் எனவும், சட்டவிரோத ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அங்கு வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறியதோடு அவர்களை வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

தமிழக அரசு

ஒருவேளை தமிழக அரசு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் துணை ராணுவத்தை வைத்தாவது அவர்களை அகற்ற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. இதை அடுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். பொது மக்களின் போராட்டத்தை எடுத்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு செய்யப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

மேகமலை

ஆனால் வாக்குறுதிக்கு எதிராக மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சர்வே செய்யும் பணிகள் தொடங்கி இருக்கிறது. இதற்காக ஊராட்சி அளவில் சர்வேயர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தேனி மாவட்ட ஆட்சியரே பிறப்பித்துள்ளார். மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு கொண்டு உள்ளிட்ட பகுதிகளில் அளவிட வருவாய், காவல், வனத்துறை உள்ளிட்ட துறைகளைக் கொண்ட 13 குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

வன விவசாயிகள்

இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக எல்லைக்குட்பட்ட 9 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த வன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மக்கள் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.

காத்திருப்பு போராட்டம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய மாநில அரசை வலியுறுத்தியும், வனத்துறை மற்றும் வருவாய்த்துறையின் வெளியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக் கோரியும், கடமலைகுண்டு புதிய பேருந்து நிலையம் முன்பு இன்று 26.09.2026 முதல் 29.09.2026 வரை 4 நாட்கள் இரவு பகலாக தொடர் காத்திருப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

கலெக்டர் அலுவலகம் மூடல்

இப்போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் பிளவுகள் பூட்டப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலக நுழைவாயிலின் இரு கேட்டுக்களும் பூட்டப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகம் வருகை தரும் அரச அலுவலர்கள் பொதுமக்கள் முறையாக சோதனை செய்யப்பட்ட பின்பே உள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+