தேனியில் தாயை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்.. எழுதி வாங்கிய சொத்து பறிபோக போகிறது.. எப்படி?
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மூதாட்டி சுப்புலட்சுமி (85) இவருக்கு இரண்டு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் மூதாட்டி சுப்புலட்சுமி அனைத்து சொத்துக்களையும் மகன், மகளுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு தனது பூர்விக வீட்டில் தனது மகன் கஸ்தூரி குடும்பத்தினருடன் வசித்துள்ளார். ஆனால் தாயை பார்த்துக் கொள்வதாக கூறி பூர்விக சொத்தை எழுதி வாங்கிவிட்டு மூதாட்டியை மகன் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார். அவர் மீது மூதாட்டி சுப்புலட்சுமி புகார் அளித்துள்ளார்.
தாயை அல்லது தந்தையை கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்து, அந்த நிபந்தனையின் அடிப்படையில் சொத்தை எழுதி வாங்கிய மகன் அல்லது மகள், பின்னாளில் கவனித்துக் கொள்ளத் தவறினால், அந்தச் சொத்தை சட்டப்படி திரும்பப் பெற முடியும். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007 என்ற மத்தியச் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சட்டத்தின் விதிகளின் படி, தாய் அல்லது தந்தை தனக்கு அடிப்படை வசதிகள் மற்றும் உடல்நலப் பராமரிப்பு வழங்கப்படும் என்ற நிபந்தனையுடன், தானமாகவோ (அல்லது மாற்றிக் கொடுக்கும் ஆவணம் மூலமாகவோ தன் மகனுக்கோ/மகளுக்கோ அல்லது உறவினருக்கோ சொத்தை எழுதித் தருகிறார். சொத்தைப் பெற்றவர், அந்த நிபந்தனையை மீறி, மூத்த குடிமக்களைக் கவனித்துக் கொள்ளத் தவறினால் அல்லது புறக்கணித்தால் அந்த சொத்து ஆவணம் செல்லாது.பழையபடி மூதாட்டிக்கே வந்துவிடும்.
இதற்குப் பிறகு, மூத்த குடிமக்கள், வருவாய் கோட்ட அதிகாரி அல்லது மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள முதியோர் பராமரிப்புத் தீர்ப்பாயத்தை அணுகிப் புகார் அளிக்கலாம். சொத்தை திரும்பப் பெற நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம். இதற்கென அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளித்தாலே சொத்தை கலெக்டர் திரும்ப மாற்றி தந்துவிடுவார். இந்த சட்டப்படி பல முதியவர்கள் தங்கள் சொத்தை திரும்ப பெற்றுள்ளனர்.
அதேபோல் சொத்து ஆவணத்தில் பராமரிப்பு நிபந்தனை தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும்கூட தீர்ப்பாயம் அந்தச் சொத்தை ரத்து செய்து பெற்றோரிடம் மீட்டுக் கொடுக்க முடியும் என்று நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன. எனவே பெற்றோரை பார்த்துக் கொள்ள தவறினால், அவர்களது சொத்துக்களை பெற்றாலும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். தேனி மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி. பொம்மிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி சுப்புலட்சுமி (85) இவருக்கு இரண்டு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் மூதாட்டி சுப்புலட்சுமி தனது அனைத்து சொத்துக்களையும் மகன், மகளுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு தனது பூர்விக வீட்டில் தனது மகன் கஸ்தூரி குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்
இந்த நிலையில் மூதாட்டியை பார்த்துக் கொள்வதாக கூறி பூர்வீக சொத்தினை கஸ்தூரி தனது பெயரில் எழுதி வாங்கிவிட்டு தற்போது தனது தாயை பராமரிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிய மூதாட்டி சுப்புலட்சுமி தனது பூர்விக சொத்தினை மீட்டு தரக்கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். தனது சொத்துக்கள் அனைத்தும் அபகரித்துக் கொண்டு தன்னை பராமரிக்காத தனது மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தள்ளாத வயதிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை கொடுத்தார்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications