பதவிக்கு ஆசைப்பட்டதில்லை...சுயநலத்துக்காக கட்சியை பயன்படுத்தி கொண்டது இல்லை - ஜெயபிரதீப் வீடியோ
கட்சியில் எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை. யாரிடமும் உதவி கேட்டு போய் நின்றதில்லை. சுயநலத்துக்காக கட்சியை பயன்படுத்தி கொண்டது இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.
தேனி: அதிமுகவின் கடைக்கோடி தொண்டனாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.
கட்சியில் எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை. யாரிடமும் உதவி கேட்டு போய் நின்றதில்லை. சுயநலத்துக்காக கட்சியை பயன்படுத்தி கொண்டது இல்லை என்றும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப். அரசியலில் நேரடி தொடர்பின்றி ஆன்மிகம், சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். இவரும் தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல் பரவியது. கம்பத்தில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக அதிமுகவினர் தெரிவித்து வந்தனர்.
சட்டசபைத் தேர்தலில் ஜெயபிரதீப் போட்டியிட வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கொளத்தூர் தொகுதி, கம்பம் உள்ளிட்ட தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அதிமுக வேட்பாளர் பட்டியல் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது அதில் ஜெயபிரதீப் பெயர் இடம்பெறவில்லை.
நன்றி வீடியோ
தனக்காக விருப்பமனு தாக்கல் செய்த ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஓ.பி. ஜெயபிரதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சியில் எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை. யாரிடமும் உதவி கேட்டு போய் நின்றதில்லை என்று தெரிவித்துள்ளார்.

கட்சி கொடியை பிடித்தேன்
7 வயதில் அதிமுக கொடியை கையில் ஏந்தினேன். 2001ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருக்கிறேன். இளைஞர் இளம்பெண்கள் பாசறையில் பணியாற்றியுள்ளேன். கடந்த 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறேன். எனக்கு நெருக்கமானவர்களின் அதிகாரத்தை ஒருமுறைக்கூட ஆட்சி நிர்வாகத்திலோ கட்சி நிர்வாகத்திலோ ஒருமுறைக்கூட பயன்படுத்தியதில்லை.

சுயநலமில்லை
எம்ஜிஆர் வகுத்துக்கொடுத்த வழியில் கட்சிக்காக கடைக்கோடி தொண்டனாக பணியாற்றுவதில் மனநிறைவோடு இருக்கிறேன்.
சுயநலத்துக்காக கட்சியை பயன்படுத்தி கொண்டது இல்லை. நான் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக, இயற்கை வளத்தை மேம்படுத்த தொடர்ந்து உழைப்பேன் என்று கூறியுள்ளார்.

போடியில் பிரச்சாரம்
போடி தொகுதியில் போட்டியிடும் ஓ. பன்னீர் செல்வத்திற்காக தீவிர களப்பணியாற்ற முடிவு செய்துள்ளார் ஜெயபிரதீப். அவருக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் எதுவும் இல்லை என்றும் அவரது நண்பர்கள் ஆர்வ மிகுதியில் விருப்பமனு தாக்கல் செய்து விட்டனர் என்றும் அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
-
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications