கூடலூர் வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு.. ஒருவர் பலி.. காவலுக்கு போனவரை கொன்றதாக உறவினர்கள் கொதிப்பு!
தேனி: தேனி மாவட்டம் கூடலூரில் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டையாடச் சென்றவர் தங்களை அரிவாளால் வெட்ட முயன்றதாக வனத்துறை தரப்பு கூறும் நிலையில், உறவினர்கள் குற்றச்சாட்டால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள குள்ளப்பா கவுண்டன்பட்டியை சேர்ந்த சிலர் கூடலூர் வெட்டுக்காடு வனப்பகுதியில் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இவர்களை வழிமறித்த வனத்துறையினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஈஸ்வரன் என்பவருக்கும், கூடலூர் வனத்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

வேட்டையாட வந்த ஈஸ்வரன் அரிவாளால் வனத்துறையினரை தாக்க முயன்றதால், வனத்துறையினர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில், குண்டு பாய்ந்து ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ஈஸ்வரனின் உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவில் வயலில் காவலுக்குச் சென்ற ஈஸ்வரனை வனத்துறையினர் சுட்டுக் கொலை செய்துள்ளதாகவும், வேட்டைக்குச் சென்றதால் சுட்டுக் கொன்றதாக பொய் சொல்வதாகவும் ஈஸ்வரனின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உயிரிழந்த ஈஸ்வரனின் உறவினர்கள் மருத்துவமனை அருகே குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications